எதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது!: ஸ்மிரிதி இரானி| Dinamalar

எதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது!: ஸ்மிரிதி இரானி

Added : மே 24, 2019 | கருத்துகள் (24)
Smriti Irani,ஸ்மிரிதி இரானி,சாத்தியம்,மத்திய அமைச்சர்

புதுடில்லி: காங்., தலைவர் ராகுலை, அமேதி தொகுதியில் தோற்கடித்த, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, 'எதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது' என்ற பிரபல ஹிந்தி கவிதை வரிகளை, தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மத்திய அமைச்சரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான ஸ்மிரிதி இரானி, 43; கடந்த 2014 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் அமேதி தொகுதியில், ராகுலை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது, 1.07 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ராகுல் வெற்றி பெற்றார். இப்போது, 2019 லோக்சபா தேர்தலில், அதே தொகுதியில், ராகுலை எதிர்த்து ஸ்மிரிதி இரானி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்மிரிதியின் வெற்றிக்கு, காங்., தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, ஸ்மிரிதி இரானி தனது 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில், 'எதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது' என்ற பிரபல ஹிந்தி கவிஞர் துஷ்யந்த் குமாரின் வரிகளை பகிர்ந்துள்ளார்.

வெற்றிக்குபின் ஏஎன்ஐ க்கு அளித்த பேட்டியில் ஸ்மிரிதி இராணி கூறியிருப்பதாவது : பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக ராகுல் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அமேதி தொகுதி மக்களுக்கு எனது நன்றிகள். கடந்த தேர்தலில் நான் அங்கு தோல்வியடைந்தபோதும், அவர்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டுவந்தேன். மீண்டும் அவர்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். இம்முறை வெற்றி வேட்பாளராக. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X