அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய்த்து போனது கன்னியாகுமரி, 'சென்டிமென்ட்'

Added : மே 24, 2019 | கருத்துகள் (89)
Advertisement
கன்னியாகுமரி, சென்டிமென்ட்

நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே, மத்தியில் ஆட்சியமைக்கும் என்ற, 'சென்டிமென்ட்' இம்முறை பொய்த்து போனது.

கன்னியாகுமரி சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகளே, மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியமைக்கும் என்ற, 'சென்டிமென்ட்' இருந்து வந்தது. இது, 2016 சட்டசபை தேர்தலில் உடைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, 2016ல் இம்மாவட்டத்தின், ஆறு சட்டசபைத் தொகுதிகளிலும், காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றாலும், மாநிலத்தில், ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி விஷயத்திலும், இதற்கு முன், இங்கு வெற்றி பெறும் கட்சி அல்லது அது இடம்பெறும் கூட்டணியே, மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் வெற்றி பெற்றார். 2009ல், காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார்.அந்த கால கட்டங்களில், காங்கிரஸ் தான், மத்தியில் ஆட்சி அமைத்தது. 2014ம் ஆண்டு தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், இத்தொகுதியில் வெற்றி பெற்றதுடன், மத்தியிலும், பா.ஜ., ஆட்சி அமைத்தது.

தற்போது, 2019 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில், பா.ஜ., வெற்றி பெற்ற போதும், கன்னியாகுமரி, பா.ஜ., வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், தோல்வியை தழுவியுள்ளார். சட்டசபை தேர்தல், 'சென்டிமென்ட்' 2016ம் ஆண்டு தேர்தலில் நீர்த்துப் போனதை போன்று, லோக்சபா தேர்தல் சென்டிமென்டும், 2019ம் ஆண்டு தேர்தலில் காணாமல் போனது.

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
24-மே-201920:12:32 IST Report Abuse
Sivagiri சு.சாமியை தவிர மற்ற தமிழ்நாடு பாஜக தலைவர்கள் எல்லாம் என்னமோ டில்லி சுல்தான் அனுப்பிய திவான்கள் போலவும் - தமிழ்நாடு என்னமோ சுல்தானுக்கு கப்பம் கட்டும் அடிமைகள் போலவும் - ஒழுங்கா டில்லி சொல்றத கேளுங்க தமிழ் மடையர்களே . .. என்ற ரீதியில் பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க . . . அதான் டில்லி சுல்தான் அதிகாரமெல்லாம் இங்க செல்லாதுன்னு தெளிவா சொல்லீட்டாங்க தமிழர்கள் . . . தமிழ் / தமிழர் / தமிழ்நாடு - இதுதான் தமிழனுக்கு முதலில் - தேசியம் அதற்கு பின்னால்தான் அதுவும் டில்லியில் இருந்து கொண்டு வந்து இங்கே கொடுத்தால்தான் ஆதரவு - இங்கே இருந்து இயற்கை வளங்களை கொண்டு போக நினைத்தால் அது நடக்காது ( ஆனால் நாங்களே எங்களை கொள்ளை அடித்துக் கொள்வோம் ) கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த குடிகள் தமிழர்கள் தமிழர் என்று ஒரு இனம் உண்டு - அதெற்கென்று ஒரு தனி குணம் / கலாசாரம் / பண்பாடு / வாழ்க்கை முறை / பாரம்பரியம் உண்டு . . . இதெல்லாம் எப்போதும் அழியாதது . . . இதை மாற்ற நினைத்த யாரும் தமிழ்நாட்டுக்குள் வர முடியாது . . . காங்கிரசானாலும் கம்யூனிஸ்ட்டானாலும் - பாஜகவானாலும் - இதுவே விதி சும்மா ஒரு திருக்குறளை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு சொன்னாலோ - வணக்கம் என்று சொன்னாலோ தமிழன் மயங்கி விட மாட்டான் . . .
Rate this:
Share this comment
Cancel
vidhura - chennai,இந்தியா
24-மே-201919:09:36 IST Report Abuse
vidhura லல்லு , மமதா, சந்திரபாபு எல்லோரும் வந்தால் கூட, வயநாடு மாதிரி வெற்றி பெற வைத்து வாழவைக்கும் தமிழகம். 10 வருடம் கழித்து பார்த்தல் பெருமை படவேண்டும் நமது செயல். இந்த கேவலம் சரித்திரத்தில் இடம் பெறும். மத சார்பின்மை பேசிவிட்டு, மதத்தை வைத்து அரசியல் நடத்துவது எங்கே என்று. இப்போது நிரூபணம் ஆகி விட்டது ...........பலனையும் அனுபவிக்கட்டும் ....
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
24-மே-201916:18:38 IST Report Abuse
Rajavelu E. தமிழன் எதிரியை கூட மன்னித்து விடுவான். ஆனால் துரோகியை ஒருபோதும் மன்னிக்க மாட்டான். தமிழன் என்றுமே அறிவில் சிறந்தவன்.தமிழன் என்றொரு இனமுண்டு அவனுக்கென்று தனி குணமுண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X