39 ஆண்டு காங்.,பாரம்பரியம் போனது; ராகுலை ஸ்மிருதி வீழ்த்தியது எப்படி ?

Updated : மே 24, 2019 | Added : மே 24, 2019 | கருத்துகள் (36)
Advertisement
TN Results, #Dinamalar, Election, காங்கிரஸ், ராகுல், ஸ்மிருதி எப்படி ?

அமேதி: உபி., மாநிலம் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ்சில் ராகுல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமேதி தொகுதியில் வேட்பாளராக நிற்பது வழக்கம். கடந்த 1980 ல் சஞ்சய் தேர்வு செய்யப்பட்டார்.இவரது மறைவுக்கு பின்னர் 1981 ல் ராஜிவ் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1984, 1989, 1991 ல் தொடர்ந்து ராஜிவ் வெற்றி பெற்று எம்.பியானார். 1996 ல் ராகுல் குடும்ப நண்பர் கேப்டன் சதீஷ்சர்மா எம்பி,.யானார். 1998 ல் ஒரு முறை பா.ஜ,. வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து 2004, 2009, 2014 ல் ராகுலே எம்.பி.,யானார். இந்த முறை ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றுள்ளார்.


இளம் வாக்காளர்கள் கவர்தல்


அவரது வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஸ்மிருதி கடந்த முறை தோல்வி பெற்றாலும், அவர் இந்த தொகுதியில் ஒரு அக்கறையோடு அடிக்கடி சென்று வந்தார். அங்குள்ள மக்களுடன் நெருங்கி பழகினார். மேலும் இங்குள்ள பா.ஜ., நிர்வாகிகளுடன் சுமுகமாக பழகி மக்கள் தேவைகளை செய்து கொடுத்தார். மேலும் இங்குள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள் தேவைகளை அறிந்து உதவி செய்து வந்தார். ஸ்காலர்ஷிப், வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவ உதவிகள் என பல விதங்களில் அவரது உதவி விரிந்தது. இது இளம் வாக்காளர்களை கவர்ந்தது.


தீ விபத்தில் உதவினார்


மேலும் டில்லிக்கு சென்றால் ஸ்மிருதியை எளிதாக அணுக முடியும் என்ற நிலையையும் ஏற்படுத்தினார். இது போன்ற விஷயங்கள் ஸ்மிருதியின் செல்வாக்கை உயர்த்தியது. சமீபத்தில் தேர்தலையொட்டி அமேதியில் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டபோது அவரே தண்ணீர் எடுத்து சென்று அணைப்பதும். அடி குழாயில் தண்ணீர் அடித்து கொடுத்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி ஸ்மிருதியின் மதிப்பை மக்கள் மத்தியில் உயர்த்தியது. ஆனால் ராகுல் இந்த தொகுதி பக்கமே வருவதில்லை என்ற குறை இருந்து வந்தது.
இது போன்ற செயல்களால் ஸ்மிருதி காங்கிரசின் கோட்டையான அமேதியை கைப்பற்றியுள்ளார். ஏறக்குறைய 39 ஆண்டுகளாக காங்கிரசின் கைவசம் இருந்த அமேதி தற்போது பா.ஜ., வசம் வந்து விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
03-ஜூன்-201915:28:06 IST Report Abuse
chander ஒட்டு மிஷினை உங்க வீட்டில் தேர்தல் கமிஷன் துணையோடு கொண்டுபோய் குத்தியிருப்பீங்க
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
07-ஜூன்-201916:25:37 IST Report Abuse
sankarஎப்படி - இங்க முப்பது ஏழு பேரு செஞ்சாங்களே - அது மாதிரியா...
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-மே-201907:46:43 IST Report Abuse
அம்பி ஐயர் இதற்காக வெட்கப்பட்டு ராகுல் வயநாட்டில் ராஜினாமா செய்ய வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
26-மே-201911:58:41 IST Report Abuse
Mohan Sundarrajarao ஜெயலலிதா மாதிரி நீங்களும் ஒரு "எங்கள் அம்மா". பதவி வந்த பிறகும் இதே போல் சிம்பிளாக இருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X