பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கேட்டு சாலை மறியல்: பஞ்., செயலாளர் உள்பட இருவர் சஸ்பெண்ட்

Added : மே 24, 2019
Advertisement

ஆரணி: குடிநீர் வசதி செய்து கொடுக்காத பஞ்., செயலாளர் உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் பஞ்சாயத்து, எத்திராஜ் நகர், ஸ்ரீராம் நகர் பகுதிகளுக்கு குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் பஞ்., செயலாளரிடமும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளரிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் நேற்று ஆரணி - வாழப்பந்தல் சாலையில், காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் கந்தசாமிக்கு, போன் மூலம் புகார் தெரிவித்தனர். அதன்படி, மறியலில் ஈடுபட்ட மக்களிடம், ஆரணி பி.டி.ஓ., குப்புசாமி, பஞ்., செயலாளர் அருண், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர் வாசு, ஆரணி தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்,' பஞ்., செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர் வாசு ஆபாசமாக பேசுவதாக' மக்கள் புகார் கூறினர். இதையடுத்து பி.டி.ஓ., குப்புசாமி லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர், மக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், கலெக்டர் கந்தசாமி உத்தரவின்படி, பையூர் பஞ்., செயலாளர் அருண், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர் வாசு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, பி.டி.ஓ., குப்புசாமி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X