தலைவர் பதவி : ராகுல் ராஜினாமா?

Added : மே 24, 2019 | கருத்துகள் (14)
Advertisement
ராகுல், காங்கிரஸ், கட்சி தலைவர், ராஜினாமா

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் காங்., பெற்ற படுதோல்வியை அடுத்து கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
லோக்சபா தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் ராகுல் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பிப்ரவரி மாதம் துவங்கி, ராகுல் மட்டும் 150 பொதுக்கூட்டங்கள், 10 செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஏராளமான வீதி பிரசாரங்களில் ஈடுபட்டார்.
அமேதி தொதியில் தோல்வி அடைந்த ராகுல், வயநாடு தொகுதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 7 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கட்சி தலைவரான அவர் அமோக வெற்றி பெற்றாலும், காங்., கட்சி 100 க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவின் பிரசாரமும் எடுபடவில்லை.
காங்.,ன் இந்த தோல்விக்கு தானே 100 சதவீதம் பொறுப்பேற்பதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் தெரிவித்தார். இதனையடுத்து ராகுல், கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், ராகுலின் தாயாருமான சோனியா இதனை ஏற்க மறுத்துள்ளார்.
இருந்தும் ராகுல் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக கட்சியின் காரிய கமிட்டி தான் முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் காங்., காரிய கமிட்டி கூட்டம் கூட உள்ளதாகவும், இதில் ராகுல் பதவி விலகுவது குறித்தும், அடுத்த தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கவும் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
24-மே-201920:20:56 IST Report Abuse
Sukumar Talpady ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு பகுதியில் வெற்றி பெற்றது ஒன்றும் பெரிய சாதனை இல்லை . அங்கே முஸ்லிம்கள் அதிகம் . அவர்கள் அத்தனை பேர்களும் அவருக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள் . அங்கே ராகுலின் வெற்றி எதிர்பார்த்ததுதான் . இவ்வளவு பெரிய வெற்றி பெற்றபிறகு ராகுல் எதற்கு கலக்கம் அடைய வேண்டும் ? அமேதி போனால் போகிறது என்று விட்டுவிடுவது தானே ஆனால் அப்படி செய்ய அவரால் முடியாது . ஏனென்றால் அமேதி அவருடைய சொந்த தொகுதி . அங்கே தோற்று போனது பெரிய அவமானம்தான் . இதையும் சாதாரணமாக எடுத்து கொள்ளலாம் அவர் . அவருடைய பாட்டி மறைந்த திருமதி இந்திரா காந்தி 1977 ல் தோற்க வில்லையா ? இப்படி சொல்லிக் கொள்ளலாம் . ஆனால் அகில இந்திய அளவில் அவருடைய காங்கிரஸ் கட்சி ஏன் படு தோல்வி அடைந்தது ? அதற்கான காரணம் நாட்டு மக்களுக்கு தெரியும் . திரு மோடியை பற்றி சாதாரணமாகவா பேசினார்கள் ? எவ்வளவு ஏச்சுக்கள் பேச்சுகள் ? மக்களே வெட்கி தலை குனிய வேண்டிதாயிற்று . மோடியின் தாயைப் பற்றி , மனைவியைப் பற்றி , தந்தையைப் பற்றி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி , எவ்வளவு பேசினார்கள் நீச்சன் என்றார்கள் இன்னும் எவ்வளவு கீழ்தரமாக பேசினார்கள் அதான் மக்கள் தீட்டி விட்டார்கள் தீட்டி . தன்மானம் என்று ஒன்று இருந்தால் ராஜினாமா செய்யத்தான் வேண்டும் . இந்த அழகில் இவரை பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்தார் தமிழ் நாட்டு " தளபதி " என்கிற ஒரு தலைவர் . அவருடைய காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்ததால் , தளபதியாரின் கட்சி போட்டி போட்ட இடங்களில் எல்லாம் வெற்றி பெற்று விட்டது . ஆனால் தமிழ் மக்கள் ஏமாந்தார்கள் . யார் யாரெல்லாம் ஊழல்வாதிகள் என்று பெயர் எடுத்தார்களோ அவர்கள் எல்லாம் வெற்றி பெற்று விட்டார்கள் . இது ஒரு தளபதியாரின் ஒரு நயவஞ்சக திட்டம் . திரு ராகுலை பிரதமர் பதவிக்கு முன்மொழிகிறேன் என்று சொன்னவுடன் திரு ராகுலுக்கு உச்சி குளிர்ந்து விட்டது . பிரச்சாரம் செய்யத்தெரியாமல் பெரிய தோல்வி அடைந்து( அதுவும் இரண்டாவது முறையாக ) அவமானப் பட்டு நிற்கிறார் . அவருடைய மனதில் அவருக்கு நன்றாக தெரியும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் தகுதி இல்லை என்று . ஆனால் கட்சியினர் அவரை விட்டால் வேறு ஆள் எல்லை என்று அவரையே பிடித்து கொண்டிருக்கிறார்கள் . திருமதி ப்ரியங்கா காந்தியும் பிரயோஜனம் இல்லை என்று நன்றாகத் தெரிந்து விட்டது . இது காங்கிரஸ் கட்சியின் தலைவிதி .இனிமேலாவது நாகரீகமாக பிரச்சாரம் செய்யுங்கள் . ராகுலை விட்டு விடுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
24-மே-201914:31:50 IST Report Abuse
Milirvan பாரதம் முழுக்க கச்சிக்கி முரட்டு சொத்து கீதே.. தலைவர் பதவிய வுட்டுப்புட்டா எப்புடி ஆட்டைய போடுறது'ன்னு சூனியா யோசிக்காதா? சசிகொலா கதிய பார்த்த எந்த திருட்டுகொட்டும் யோசிக்குமே...
Rate this:
Share this comment
Cancel
SUBRAMANIAN P - chennai,இந்தியா
24-மே-201914:19:14 IST Report Abuse
SUBRAMANIAN P என்ன தலைவரே நீங்க தலைவரா பதவி ஏத்து முதல் தேர்தல் தான இது. அதுக்குள்ள அவசரப்படுறீங்களே தலைவரே. இன்னும் நெறைய வாய்ப்புகள் இருக்கு தலைவரே. வெளி நாட்டுக்கு போய்டாதீங்க. இங்கயே இருந்து இன்னும் நெறைய கத்துக்கோங்க. அடுத்த தேர்தல்ல நாம ஒரு கை பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X