காங்., ஆம்ஆத்மியை தாண்டிய பா.ஜ.,

Updated : மே 24, 2019 | Added : மே 24, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ஆம்ஆத்மி, டில்லி, பா.ஜ.,காங்கிரஸ், ஓட்டு சதவீதம், லோக்சபா தேர்தல்

புதுடில்லி : டில்லியில் ஆளும் கட்சியான ஆம்ஆத்மி, லோக்சபா தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காங்., மற்றும் ஆம்ஆத்மியை சேர்த்தால் கூட, பா.ஜ., வாங்கிய ஓட்டுகளை நெருங்க முடியாது.
டில்லியில் மொத்தமுள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ., பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. டில்லியில் பா.ஜ., 56.5 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தன. இது 2014 ல் பா.ஜ., பெற்ற 46.6 சதவீதம் ஓட்டுக்களை விட 10 சதவீதம் அதிகம். இதில் பா.ஜ.,வின் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகிய இருவரும் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றனர். மேலும் 2 பேர் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் பெற்றனர்.
ஆனால் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு மொத்தமே 33.1 சதவீதம் ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகியது. ஓட்டு பங்கீட்டின் அடிப்படையில் பார்க்கும் போது 18.1 சதவீதத்துடன் ஆம்ஆத்மி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதே சமயம், காங்.,ன் ஓட்டு சதவீதம் 15.2 சதவீதத்தில் இருந்து 22.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 5 தொகுதிகளில் காங்., 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. டில்லியில் பா.ஜ., மட்டும் பாதிக்கும் அதிகமான ஓட்டுக்களை அள்ளியது. மீதமுள்ள ஓட்டுக்களையே ஆம்ஆத்மி, காங்., கட்சிகள் பங்கிட்டுக் கொண்டன.


அதாவது, டில்லியில் ஆம்ஆத்மி வாங்கியது 18.1 சதவீத ஓட்டு, காங்., பெற்றது 22.5 சதவீதம். இரண்டையும் சேர்த்தால் 40.6 சதவீதம். ஆனால் இதைவிட அதிகமாக அதாவது 56.5 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றது, மற்ற இரு கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-மே-201910:43:17 IST Report Abuse
இந்தியன் kumar கெஜ்ரிவால் வேஷம் கலைந்தது
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-மே-201910:14:56 IST Report Abuse
இந்தியன் kumar மோடிஜியின் கடின உழைப்புக்கு டெல்லி மக்கள் மாபெரும் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel
BJP TEAM - மதுரை,இந்தியா
24-மே-201914:41:57 IST Report Abuse
BJP TEAM வாழ்க மோடி ஜி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X