அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல்நாத் அதிகாரிகளிடம் ஐ.டி.ரெய்டு; சிபிஐ விசாரிக்க கோரிக்கை

Added : மே 24, 2019 | கருத்துகள் (1)
Advertisement
கமல்நாத், வருமான வரித்துறை, சிபிஐ விசாரணை

போபால் ; மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின், சிறப்பு அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது தேர்தல் கமிஷன். இது தேர்தலுக்கு பிந்தைய அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.


5 சிறப்பு அதிகாரிகள்


கடந்த ஏப்ரல் 7 அன்று மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின், சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றுவோர் 5 பேரின் 52 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. டில்லி, நொய்டா, போபால், இந்துார் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை இந்த சோதனைகளை நடத்தியிருந்தது.


ரூ.20 கோடி பணம்


சோதனையில் சிக்கிய ஆதாரங்கள் குறித்து அதிகாரிகள் அப்போது கூறிய தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அதில், 'கமல்நாத் சிறப்பு அதிகாரிகள் 5 பேரின் டைரிகள், அவர்களது வாட்ஸ் ஆப் உரையாடல்கள், கணக்கில் காட்டப்படாத 20 கோடி ரூபாய் பணம், காங்கிரஸ் கட்சியின் புதுடில்லி தலைமைக்கு கைமாறிய விபரங்கள், இதற்காக 14 சட்டமன்ற வேட்பாளர்கள், 11 லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் மூலம் கைமாறிய பணம் குறித்த ஆவணங்கள், 11 மாநிலத்துறைகளிலிருந்து முதல்வரின் சிறப்பு அதிகாரிகளுக்கு பணம் கைமாறிய விபரங்கள்,' அவற்றில் இருந்துள்ளன, என்று அவை தெரிவித்திருந்தன.


ம.பி.,யில் பரபரப்பு


இந்த சோதனைகள் குறித்து சிபிஐ உரிய வழக்குகள் பதிவு செய்து விசாரிக்குமாறு, பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடந்த வாரத்தில் கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன. ஏற்கனவே, மத்திய பிரதேச கமல்நாத் தலைமயிலான காங்கிரஸ் மாநில அரசு நம்பிக்கை வாக்கு கோரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது, அம்மாநில பா.ஜ., தலைமை. இந்நிலையில் சிபிஐ விசாரணை கோரிக்கை மேலும், அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-மே-201913:53:14 IST Report Abuse
Nallavan Nallavan காங்கிரஸ்ல ஒருத்தனுக்கொருத்தன் சளைச்சவன் இல்ல ...... ஒருத்தன் பாக்தாத் திருடன் -ன்னா, இன்னொருத்தன் பலே திருடனா இருக்கான் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X