தாத்தாவுக்காக பதவியை துறக்கும் பேரன்

Added : மே 24, 2019 | கருத்துகள் (15)
Advertisement
ம.ஜ.த., தேவகவுடா

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தும்கூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடா தோல்வியடைந்தார். அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, ஹசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தான் தேவகவுடா முன்னர் போட்டியிட்டார். பேரனுக்காக இந்த முறை தொகுதி மாறி தேவகவுடா தோல்வியடைந்தார்.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா கூறுகையில், மதசார்பற்ற ஜனதா தள தொண்டர்களின் நம்பிக்கையை பெறவும், தேவகவுடா தோல்வியால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவும் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ஹசன் தொகுதியில், மீண்டும் தேவகவுடா போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
25-மே-201910:51:45 IST Report Abuse
Viswam முதலுல தாத்தா பேரனுக்கு விட்டுகுடுப்பாராம், பிறகு பேரன் தாத்தாவுக்கு ரிசல்ட் வந்த அரை நாளுக்குள் தாத்தா தோத்ததை தாங்க முடியாமல் அவர் சீட்டை விட்டுகுடுப்பாராம். இரண்டு பெரும் வாக்காளர்களை கேனப்பசங்க மாதிரி நினைத்துவிட்டார்கள் போல. ரிசைன் செஞ்சா செய்யட்டும். இவங்களை போட்டு பார்க்கணும்னா இப்ப உடனே தேர்தல் வைக்கக்கூடாது . மறுபடி இடைத்தேர்தலுக்கு ஏதாவது சான்ஸ் வரும் அப்ப சேர்த்து வச்சுலக்கலாம். கூவிக்கொண்டு கிடக்கட்டும் ப்ரஜ்வலும் தேவேகௌடாவும்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-மே-201916:33:35 IST Report Abuse
Bhaskaran செலவை நீகொடுப்பியா
Rate this:
Share this comment
Cancel
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-மே-201914:07:21 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் தாத்தாவுக்காக ராஜினாமா செய்கிறேன் பிரஜ்வல் யப்பா உலகமகா நடிப்புடா சாமி…. பிரஜ்வல் வேட்புமனுவில் ஏராளமான குளறுபடிகள் மற்றும் 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கையும் தாக்கல் செய்யவில்லை வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது அது தொடர்பாக விசாரணை நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை முடிவடைந்து அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது,வழக்கு தொடர்ந்தால் நிச்சயம் பிரஜ்வல் பதவி பறிபோகும்… நடிப்பில் திராவிட கட்சிகளை மிஞ்சிடான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X