வெப்பம் உயரும் ; மழையும் பெய்யும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெப்பம் உயரும் ; மழையும் பெய்யும்

Added : மே 24, 2019
வெப்பம், வெயில், மழை, வானிலை

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மழை பெய்யாத இடங்களில் வழக்கத்தை விடவும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மையத்தின் அறிக்கையில், ''வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மழை பெய்யாத இடங்களில் வெப்பம் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

பொதுமக்கள் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கலாம். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி, குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்,'' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வரும் 26 ஆம் தேதியன்று உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் கூடலூரில் 3 சென்டி மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X