பயிற்சி மைய கட்டடத்தில் தீ: பலி 20 ஆக உயர்வு

Updated : மே 24, 2019 | Added : மே 24, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சூரத்,வணிக வளாகத்தில், தீ, 20 பேர், பலி

சூரத்: குஜராத்தில் பயிற்சி மைய கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரம்மாண்ட வணிகவளாகம் உள்ளது. இன்று மாலை இந்த வணிவளாகத்தின் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 20பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ மளமளவென பரவி வருவதால் 20 வாகனங்களில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகி்ன்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்கப்படும் என மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என சூரத் நகர் காவல் ஆணையர் சதீஷ்குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-மே-201911:44:43 IST Report Abuse
Pugazh V
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-மே-201911:43:25 IST Report Abuse
Pugazh V எழவு, "இதுங்க" வந்தாலே விபத்து சோகம் வில்லங்கம். எல்லாம் கூடவே வருது. Though this sounds unwise, couldn't stop thinking in this line.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மே-201904:30:48 IST Report Abuse
J.V. Iyer எதிர்க்கட்சிகள் ஆரம்பித்துவிட்டனவா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X