பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்

Added : மே 24, 2019 | கருத்துகள் (36)
Advertisement
பிரதமர், மோடி, வெளிநாட்டு, பயணத்திட்டம்

புதுடில்லி:பிரதமர் மோடி வரும் ஜூன் மாதத்தில் தமது வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளார். 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அவர் முதலில் கிர்கிஸ்தான் நாட்டுக்கு செல்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை 44 நாடுகளுக்கு நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார்.


பயணதிட்டம்

இந்நிலையில் அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர், அடுத்த 6 மாதங்களில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணம் குறித்த திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி வருகிற ஜூன் 13 ஆம் தேதி முதல்15ம் தேதி வரை அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார்.
அங்கு 3நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். ஜூன் மாதம் 28-ஆம் தேதி ஜப்பான் செல்லும் மோடி, அங்கு இரு நாட்கள் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்கிறார். ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் பிரான்சுக்கு செல்லும் மோடி, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவுக்கும், 3-வது வாரத்தில் அமெரிக்காவுக்கும் செல்ல உள்ளார்.
நவம்பர் 4 ஆம் தேதி தாய்லாந்து நாட்டிற்கும்,11ஆம் தேதி பிரேசிலுக்கும் மோடி செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajit Kumar - Chennai,இந்தியா
28-மே-201917:13:23 IST Report Abuse
Ajit Kumar முன்னாடி இவருக்கு அமெரிக்காவுக்கு செல்ல விசா குடுக்க வில்லை, இப்பொழுது நமது நாட்டின் பிரதமர் என்பதற்க்காக இந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Ajit Kumar - Chennai,இந்தியா
28-மே-201917:11:36 IST Report Abuse
Ajit Kumar அடுத்த ரவுண்டு ஸ்டார்ட் ஆயிடுச்சி, உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
28-மே-201915:51:36 IST Report Abuse
நெல்லை மணி, ஆரம்பிச்சிட்டாரு ஐயா ஆரம்பிச்சிட்டாரு ........(வெளிநாட்டு பயணத்தை)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X