16-வது லோக்சபா கலைப்பு: ஜனாதிபதியை சந்தித்தார் மோடி

Added : மே 24, 2019
Advertisement
16-வது, லோக்சபா, கலைப்பு, ஜனாதிபதியை, சந்தித்தார், மோடி

புதுடில்லி: மத்தியில் மீண்டும் பா.ஜ. புதிய அரசு அமைக்கவிருப்பதையொட்டி இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது லோக்சபாவை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் மோடி.

நடந்து முடிந்த பார்லி.லோக்சபா தேர்தலில் பா.ஜ. கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பிரதமராக மீண்டும் மோடி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். உடல்நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை.
இக்கூட்டத்தில் 16-வது லோக்சபாவை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய அரசு அமைக்க வேண்டி பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். அப்போது மத்திய அமைச்சர்கள் மற்றும் தனது ராஜினாமா கடித்தை வழங்கினார். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமைக்கும் வரை தொடர்ந்து பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X