சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: தமிழகத்தின் வளர்ச்சிக்காக, மத்திய - மாநில அரசுகளிடம், எங்களது, 10 அம்ச கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.

டவுட் தனபாலு: 'பழசை எதையும் மனசில் வைத்துக் கொள்ளாமல், உங்களை கூட்டணியில் சேர்த்தோமே... எங்கள் கட்சி ஜெயிக்க என்ன செய்தீங்க'ன்னு, பதிலுக்கு, அவர்கள், 'டவுட்' எழுப்புவாங்களே... அது சரி, உறுதியளித்தபடி, ராஜ்யசபா, எம்.பி., பதவி கேட்டு வலியுறுத்துவீங்களா... இல்லை, இந்த, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றினால் போதும்னு, பெரிய மனசு பண்ணி விட்டுடுவீங்களா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: அ.தி.மு.க.,வைப் பற்றி கருத்து சொல்ல, கருணாஸ் அரசியல் மேதை இல்லை. அவர், அ.தி.மு.க.,வில் மாவட்டச் செயலரோ, உயர்மட்டக் குழு உறுப்பினரோ இல்லை. அவருக்கும், அ.தி.மு.க., கட்சிக்கும், எந்தத் தொடர்பும் இல்லை.

டவுட் தனபாலு: கருணாஸ் தனி அமைப்பை நடத்தி வந்தாலும், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றது, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தில் தான்... உங்களுக்கும், அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், கட்சி விரோத செயலில் ஈடுபட்டாலும், கண்டுக்க மாட்டீங்களா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!


தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை: தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான பொய் பிரசாரம் எடுபட்டு விட்டதோ என்ற சந்தேகம் உள்ளது.
டவுட் தனபாலு: பா.ஜ., வோடு கூட்டணி வைத்ததால் தான், அ.தி.மு.க.,வுக்கு இந்த கதின்னு சொல்லாம சொல்றீங்க போல... அது கிடக்கட்டும், எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்கத் தானே, கட்சியில் உங்களுக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்க... அதைச் சரிவரச் செய்யலை என்பதை ஒப்புக் கொள்றீங்களா என்பது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-மே-201918:53:52 IST Report Abuse
D.Ambujavalli சும்மா கருணாஸை விமர்சித்தால் அவர் 'கூவத்தூர் அத்தியாயம்' என்று நாவலே எழுதி வெளியிட்டுவிடுவாரே, பரவாயில்லையா? அப்புறம் உங்க இரும்புக்கோட்டை துருப்பிடித்துக் கரைந்துவிடுமே
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
25-மே-201905:01:44 IST Report Abuse
Abdul Rahman திக, பாமக, விசி, கி.சாமி, நாம் ஆங்கிலேயர், திருட்டுக்கோட்டை தினகரன், பெண் பித்தன் சப்பாணி இவர்கள் எல்லாம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X