கோரிக்கை தொடரும்!| Dinamalar

கோரிக்கை தொடரும்!

Added : மே 24, 2019 | கருத்துகள் (1)
 கோரிக்கை தொடரும்!

கோரிக்கை தொடரும்!
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்படி, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். இதற்காக, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். இந்த விஷயத்தில், கட்சி பாரபட்சமின்றி, பிரதமர் மோடி செயல்படுவார் என, நம்புகிறேன்.ஜெகன்மோகன் ரெட்டிதலைவர், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்
புதிய விடியல்!
அமேதி தொகுதி மக்களுக்கு புதிய விடியல் பிறந்துள்ளது. எனக்காக ஓட்டளித்த மக்களுக்கு, நன்றி தெரிவிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. அமேதியில் தாமரை மலர்ந்துள்ளது. என் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்.ஸ்மிருதி இரானிமத்திய ஜவுளித்துறை அமைச்சர், பா.ஜ.,
இதெல்லாம் சகஜம்!
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்தது, வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், கட்சித் தொண்டர்கள் இதற்காக கவலைப்படக் கூடாது. அரசியலில், வெற்றியும், தோல்வியும் சகஜம். மீண்டும் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.ராபர்ட் வாத்ராகாங்., மூத்த தலைவர் சோனியாவின் மருமகன்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X