காஷ்மீரில் தேடுதல் வேட்டை பயங்கரவாதி சுட்டு கொலை

Added : மே 24, 2019
Advertisement

ஸ்ரீநகர், காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினரால்சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பியோடிய மற்றவர்களை தேடும் வேட்டை தீவிரமாக நடக்கிறது.ஜம்மு - காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சிநடக்கிறது. இங்குள்ள,புல்வாமா மாவட்டம், தத்ரஷா என்ற கிராமத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படையினர், அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதி கள், கையெறி குண்டுகளை வீசி, படையினர் மீதுதாக்குதல் நடத்தினர்.பாதுகாப்பு படையினரும், பதிலடி கொடுத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்; மற்றவர்கள் தப்பியோடினர்.இறந்தவன், அல் - குவைதா பயங்கரவாத இயக்கத்தின் துணை அமைப்பான, 'அன்சார் கஸ்வாதுல் ஹிந்த்' என்ற இயக்கத்தின் தலைவன் என, கூறப்படுகிறது.

இதையடுத்து, ஷோபியான், புல்வாமா, அவந்திபுரா மற்றும் ஸ்ரீநகர் புறநகர் மாவட்ட எல்லை பகுதிகளில், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.நேற்று அதிகாலையில், முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக, சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; மொபைல் போன் மற்றும் இணையதள சேவைதுண்டிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X