அத்வானியுடன் மோடி சந்திப்பு| Dinamalar

அத்வானியுடன் மோடி சந்திப்பு

Added : மே 24, 2019
 அத்வானியுடன் மோடி சந்திப்பு

புதுடில்லிபா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சந்தித்து, ஆசி பெற்றார்.லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, 350க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றிய, பா.ஜ., தனியாக, 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று டில்லியில் உள்ள, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானியின் வீட்டுக்கு சென்ற, பிரதமர் மோடி, அவரிடம் ஆசி பெற்றார்.மற்றொரு மூத்த தலைவரான, முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கு சென்ற மோடி, அவரிடமும் ஆசி பெற்றார். பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவும், மோடியுடன் சென்றார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில், மோடி கூறிஉள்ளதாவது:பா.ஜ.,வின் மதிப்புக்குரிய தலைவர், அத்வானி. இந்த கட்சியை கட்டமைத்து, வளர்த்ததில், அவருக்கு முக்கிய பங்கு உண்டு. முரளி மனோகர் ஜோஷி, மிகச் சிறந்த அறிவாளி; கல்வியாளர். இந்திய கல்விமுறையின் வளர்ச்சிக்காக, இவர் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. கட்சியை பலப்படுத்துவதற்காக, தொடர்ந்து பணியாற்றி வருகிறார். என்னைப் போன்ற கட்சிக்காரர்களுக்கு, முன்னோடி அவர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X