பதிவு செய்த நாள் :
வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு
பிரதமர் நரேந்திர மோடி நன்றி

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதற்காக, வாழ்த்து தெரிவித்த, வெளி நாட்டு தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைவருக்கும், பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' சமூகவலைதளம் மூலம், நன்றி தெரிவித்துள்ளார்.

 வாழ்த்து,பிரதமர்,நரேந்திர மோடி, நன்றிமீண்டும் பதவி


லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலில், பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.இதில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350

இடங்களில் வென்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார்.ஓட்டு எண்ணிக்கையில், தே.ஜ., கூட்டணி யின் வெற்றி உறுதியான நிலையிலேயே, பிரதமர் மோடிக்கு, பல நாடுகளின் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர் - நடிகையர் உட்பட பலரும் வாழ்த்துதெரிவித்தனர்.

அமெரிக்க துணை அதிபர், மைக் பென்சி, மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கூறுகையில், ''இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற, அமெரிக்கா தயாராக உள்ளது,'' என்றார்.இதற்கு நன்றி தெரிவித்து மோடி அனுப்பிய பதிலில்,'இது, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்தியா - அமெரிக்க உறவை, தொடர்ந்து மேம்படுத்த முயற்சிப்பேன்' என, கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு


ரஷ்ய அதிபர்,புடினுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய செய்தியில், 'உங்கள் வாழ்த்துக்கு நன்றி. இரு நாடுகளின் நட்பை மேம்படுத்த, நம் இருவரின் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என, கூறியுள்ளார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரடியு, பிரான்ஸ் அதிபர் மக்ரோன், இந்தோனேஷியா

Advertisement

அதிபர் விடோடோ, நைஜீரியா அதிபர் புகாரி, சவுதி அரேபியா மன்னர், சல்மான், ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உட்பட பலருக்கும், மோடி நன்றி தெரிவித்து உள்ளார். அதில், சம்பந்தப் பட்ட நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்த, ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

'பாலிவுட் நடிகையர், ஷில்பா ஷெட்டி, ரவீனா டாண்டன், நடிகர் மாதவன், இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், சரோட் வாத்திய கலைஞர் அம்ஜத் அலி கான்,குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உட்பட பலருக்கும், பிரதமர் நன்றி தெரிவித்து, தகவல் அனுப்பிஉள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
25-மே-201909:54:12 IST Report Abuse

T M S GOVINDARAJANசென்ற முறை போல் இந்த முறையும் நீங்கள் அதிகம் வெளிநாட்டு தலைவர்களிடம் தொடர்புகொண்டு நட்புக் கொண்டு இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைத்து உலகெங்கும் மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்ள பொருட்களை அறிமுகப்படுத்தி ரூபாயின் மதிப்பை உயர்த்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்து வேலைவாய்ப்புகளை பெருக்கி இந்தியாவை வல்லரசாக்க இறைவன் உங்களுக்கு அருள்புரிய வேண்டுகிறேன் இறைவன் மீண்டும் உங்களை பிரதமராக்கி யதற்கு நன்றியை இறைவனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-மே-201908:01:55 IST Report Abuse

VENKATASUBRAMANIANMr Anbu doesn't understand the world wide image of India. This is happened because of his foregn visit. Now India is in top five countrues in the world to decide anything. Everybody in the world looking on India. This helped India when we attack Pakistan like US did in the terror attack on binaden. Great Victory to India.

Rate this:
blocked user - blocked,மயோட்
25-மே-201906:06:32 IST Report Abuse

blocked userநாட்டின் எதிரிக்கட்சிகளை தூள் தூளாக்கி வெற்றி பெற்ற பிரதமருக்கு வாழ்த்துக்கள்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X