முன்னாள் போலீஸ் கமிஷனர் மனு தள்ளுபடி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கலக்கம்

Added : மே 24, 2019
Advertisement
 முன்னாள் போலீஸ் கமிஷனர் மனு தள்ளுபடி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கலக்கம்

புதுடில்லி, கைது செய்வதற்கான தடையைநீட்டிக்குமாறு கோரிய, கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர் மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி, தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்கே, தலைநகர் கோல்கட்டாவின் போலீஸ் கமிஷனராக இருந்தவர் ராஜிவ் குமார். இவர், 'சாரதா சிட் பண்ட்' நிதி நிறுவனத்தின், மோசடி குறித்து விசாரித்த குழுவின் தலைவராக இருந்தார்.

இந்த நிதி நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டிய, 4,375 கோடி ரூபாயை தராமல் ஏமாற்றியது என, குற்றம் சாட்டப்பட்டது.இந்த மோசடியில், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து, ராஜிவ் குமார் விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ., விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், விசாரணை அதிகாரியாக இருந்த ராஜிவ் குமார்,பல முக்கிய ஆவணங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக, ராஜிவ் குமார் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.ஆனால், ராஜிவ் குமார், சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் வீட்டுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் சென்றனர். மாநில போலீசார், சி.பி.ஐ., அதிகாரிகளைசிறைபிடித்தனர்.

இதையடுத்து, சி.பி.ஐ., தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம், மேகாலயா மாநிலம், ஷில்லாங் நகரில் வைத்து, ராஜிவ் குமாரிடம் விசாரிக்க உத்தரவிட்டது.இந்த விசாரணைக்குப் பின், சி.பி.ஐ., கடந்த வாரம், மீண்டும் ஒரு மனு தாக்கல்செய்தது. அதில், ராஜிவ் குமாரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்கஅனுமதி கோரியது.கைது செய்ய தடை கோரி, ராஜிவ் குமார், கடந்த, 17ல் மனு தாக்கல் செய்தார். மே, 24 வரை, ராஜிவ் குமாரை கைது செய்ய, நீதிபதிகள் தடை விதித்தனர்.

ஆனால், கடந்த, 20ல், ராஜிவ் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கைது செய்ய தடையை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.அந்த மனுவை நேற்று விசாரித்த, உச்ச நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி, அருண் மிஸ்ரா, ''கோல்கட்டா உயர் நீதிமன்றம் அல்லது விசாரணை நீதிமன்றத்தை அணுகவும்,'' எனக்கூறி, ராஜிவ் மனுவை தள்ளுபடி செய்தார்.இதனால், சி.பி.ஐ., அதிகாரிகள், ராஜிவ் குமாரை எந்த நேரத்திலும் கைது செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X