பதிவு செய்த நாள் :
துவக்கம்! 
 மத்தியில் புதிய அரசு அமைக்கும் பணிகள்..
யாருக்கு மந்திரி பதவி என்ற அலசலும் ஆரம்பம்

புதுடில்லி: மத்தியில் புதிய அரசு அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நடப்பு லோக்சபாவை கலைத்து, மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. பிரதமர் மோடி தலைமையில், புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்க உள்ளது.

புதிய அரசு, பணிகள், துவக்கம், மந்திரி பதவி,ஆரம்பம்



யார் யாருக்கு மந்திரி பதவி என்பது குறித்து, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளில் நேற்றே பேச்சு துவங்கியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவு, பா.ஜ., தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. மொத்தமுள்ள, 542 தொகுதிகளில், பா.ஜ., வுக்கு, 303; காங்கிரசுக்கு, 52 இடங்கள் கிடைத்து உள்ளன.புதிய அரசு அமைக்கும் முயற்சிகள் நேற்று முதல் துவங்கின. அதன் ஒரு கட்டமாக, பிரதமர் மோடி தலைமையில், நேற்று மாலை, மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் கூடியது.


தீர்மானம்




அதில், நடப்பு, 16வது லோக்சபாவை கலைத்து, தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. சில நிமிடங்களே நடந்த அந்த கூட்டத்தில், நடப்பு லோக்சபாவை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், பிரதமர் பதவி மற்றும் அமைச்சர்கள் பதவிகளை அனைவரும் ராஜினாமா செய்து, ஒட்டு மொத்தமாக தீர்மானம் நிறைவேற்றினர்.


தீர்மான நகலுடன், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமருடன், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க சென்றார், மோடி.அவரை சந்தித்து, அமைச்சரவையின் தீர்மானத்தை அளித்து, கலைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதை ஏற்ற ஜனாதிபதி, புதிய அரசு பதவியேற்கும் வரை, காபந்து பிரதமராக தொடருமாறு, பிரதமரை கேட்டுக் கொண்டார்.

நடப்பு லோக்சபாவின் பதவிக் காலம், ஜூன், 3 வரை உள்ளது. அதற்குள் அதை கலைக்க வேண்டும்; இல்லையேல், அந்த தேதியில் அது தானாக கலைந்து விடும்.


இந்நிலையில், அடுத்த வாரம், மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்க

உள்ளதாக, தகவல்கள் பரவின. அதில், யார் யாருக்கு என்னென்ன பதவிகள் என்ற யூகம் பரவியது. நேற்றைய நிலவரப்படி, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சராவது உறுதியானது. அவருக்கு, உள்துறை, நிதி, ெவளியுறவுத்துறை அல்லது பாதுகாப்புத்துறை வழங்கப்படும் என, கூறப்பட்டது.ஏனெனில், நிதித்துறை அமைச்சராகஉள்ள, அருண் ஜெட்லிக்கு உடல் நிலை மிகவும் நலிவுஅடைந்துள்ளதால், அவர் மீண்டும் அமைச்சர வையில் இடம்பெற மாட்டார் என,கூறப்படுகிறது.


முக்கியத்துவம்


அதுபோல,வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ், உடல் நலக்குறைவை காரணமாக காட்டி, இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அமைச்சரவையில் சேரும் படி அவர் கட்டாயப்படுத்தப்படுவார்; மறுத்தால், அந்த பொறுப்பில், அமித் ஷா நியமிக்கப்படுவார் என, கூறப்படுகிறது.


ராணுவ அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், சிறப்பாக செயல்படுவதால், அந்த துறையின் அமைச்சராக அவரே தொடர்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அமைச்சர்களாக, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், பியுஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் போன்றோர் தொடர உள்ளனர்.


பா.ஜ.,வின் முக்கிய கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு, முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட உள்ளன. ஏனெனில், அவ்விரு கட்சிகளும், இந்த தேர்தலில், முறையே, 16 மற்றும், 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.பா.ஜ.,வை வலுப்படுத்தும் விதமாக வும், இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.நேற்றைய நிலவரப்படி, வரும், 30ல், புதிய அரசு பதவியேற்கும் என, கூறப்பட்டது.


ஜெட்லி இடம் பெறுவது சந்தேகம்




மத்தியில், பிரதமர் மோடி தலைமையில், புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில், அருண் ஜெட்லி இடம் பெற மாட்டார் எனக் கூறப்படுகிறது. உடல்நிலைமிகவும் நலிவடைந்திருப்பதால், அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, 66, மத்திய நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சராக உள்ளார்.ராஜ்யசபா, எம்.பி.,யான இவர்,இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.



மிகவும் நலிவடைந்துள்ள அவருக்கு, புற்றுநோய்

Advertisement

இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அவர், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.பிரதமர் மோடி தலைமையில், மத்தியில் மீண்டும், பா.ஜ., அரசு அமைய உள்ளது. அதில், அருண் ஜெட்லி இடம் பெற மாட்டார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்டாயம் அவர் இடம் பெற வேண்டும் என, கட்சி யினர் வற்புறுத்தினால், சாதாரண, முக்கியத்துவம் இல்லாத, ஏதாவது ஒரு துறையின் அமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.அதே நேரம், மத்திய ஜவுளித் துறை அமைச்சராக உள்ள, ஸ்மிருதி இரானிக்கு, 43, முக்கியத்துவம் வாய்ந்த இலாகா ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

பதவிப் பிரமாணம்




ஏனெனில், காங்கிரஸ் தலைவர், ராகுல் மூன்று முறை வென்ற,உ.பி.,யின் அமேதி தொகுதி யில், இந்த முறை அவரை தோற்கடித்த ஸ்மிருதிக்கு, முக்கிய இலாகா வழங்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த, 2014 தேர்தலில், அமேதியில் ராகுலிடம் தோல்வி அடைந்த ஸ்மிருதி, ராஜ்யசபா,எம்.பி.,யாக ஆக்கப் பட்டார். முதலில், மனித வளத்துறை அவருக்கு வழங்கப்பட்டது; அதன் பிறகு, ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டார்.



ஆனால், இந்த முறை, ராகுலை அவர் வீழ்த்தி உள்ளதால், முக்கியஇலாகாவுக்கு தலைமை வகிப்பார் என்பது பேச்சாக உள்ளது.அதுபோல, மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பா.ஜ., - எம்.பி.,க்கள் சிலருக்கு, மத்திய அமைச்சரவையில், முக்கிய பதவிகள் காத்திருக்கின்றன என்ற பேச்சும் அடிபடுகிறது.


பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, சந்தோஷ் கங்வார், 70, தற்காலிக சபாநாயகராக இருந்து, புதிய, எம்.பி.,க் களுக்கு பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.இவர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைாய்ப்புத் துறை இணையமைச்சராக உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மே-201906:35:19 IST Report Abuse

ஆப்புபெட்ரோல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? எறங்கி அடிங்க....

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
25-மே-201913:16:52 IST Report Abuse

r.sundaramதமிழர்கள் நன்றியை காட்டவில்லையே. அப்படி நன்றி கூறுவதை இருந்தால் பொன்னார் ஜெயித்து இருக்க வேண்டுமே. மத ரீதியாக அல்லவா வாக்குகள் பிரிந்து உள்ளது. தமிழகம் திருந்தும் என்பதற்கான வாய்ப்புகள் சமீபத்தில் காணப்பட வில்லை.என்று கழகங்கள் தமிழகத்தில் இருந்து ஒழிகிறதோ அன்றே தமிழகம் உருப்படும். தமிழர்களுக்கு வாக்குக்கு ரூபாயும், ஒரு குவாட்டரும், பிரியாணியோயும் போதும். தன் மகனுக்கு வேலை வேண்டாம், குடிக்க தண்ணீர் வேண்டாம், நாடு நலம்பெற வேண்டாம், பைசாவும் குவாட்டரும் மட்டும் போதும்.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
25-மே-201913:07:31 IST Report Abuse

r.sundaramதிரு. சுப்பிரமணியம் ஸ்வாமி அவர்களை சீன தூதராக நியமிக்கலாம். சீன தலைவர்களுடன் சுவாமி அவர்களுக்கு நல்ல பழக்கம் உண்டு. இதனால் இரண்டு காரியம் நடக்கும்.ஓன்று சீனாவுடன் நமது உறவு சீராகும். இரண்டாவதாக சீனாவை பாகிஸ்தான் வசம் சாயாமல் பார்த்துக்கொள்ளலாம்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
26-மே-201907:15:27 IST Report Abuse

Manianஆனால் சீனர்கள் பலே கில்லாடி. அவர் மூலம் டெல்லியும் கால் பதித்துவிடுவார்கள். அகற்றவே முடியாது சீமை கருவேல மரங்கள். ...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X