பதிவு செய்த நாள் :
தாமரை மலர்ந்தது; கணிப்பு பொய்த்தது

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், பா.ஜ., வட கிழக்கு மாநிலங்களிலும், பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளது.

 தாமரை,மலர்ந்தது,கணிப்பு,பொய்த்ததுஇந்தாண்டு துவக்கத்தில், மத்திய அரசு, அன்னிய குடியேற்றச் சட்டத் திருத்த மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்றியது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, வட கிழக்கு மாநிலங்களில் குடியேறிய, ஹிந்து, சீக்கியம், கிறிஸ்துவம், புத்தம், ஜைனம், பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு, குடியுரிமை வழங்க, இந்த மசோதா வகை செய்கிறது.இதை எதிர்த்து, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில்,

மண்ணின் மைந்தர்கள் நடத்திய போராட்டங்கள், வன்முறையில் முடிந்தன.

அதனால், லோக்சபா தேர்தலில், வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வியைத் தழுவும் என,எதிர்பார்க்கப்பட்டது. மத்திய அரசும், மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்றதீவிரம் காட்டவில்லை.இந்நிலையில், வட கிழக்கு மாநிலங்களில், 25 லோக்சபா தொகுதி களில், 18 இடங்களை, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது, வியப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் நான்கு இடங்களை யும், அதன் கூட்டணி கட்சிகள் இரண்டு இடங்களை யும் பிடித்துள்ளன; ஒரு இடத்தில், சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்.


அசாமில், பா.ஜ., தனித்து, ஒன்பது இடங்களை வென்றுள்ளது. கடந்த தேர்தலில், ஏழு இடங்களை கைப்பற்றி இருந்தது. காங்.,கடந்த முறையும், தற்போதும், மூன்று இடங்களை வென்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், பா.ஜ., இரு இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்திய இணை அமைச்சர், கிரன் ரிஜிஜு, தபிர் காவோ வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில், காங்கிரஸ் வசமிருந்த 2 இடங்களை,

Advertisement

பா.ஜ., மற்றும் நாகா மக்கள் கூட்டணி கைப் பற்றி உள்ளது. திரிபுராவிலும், இரு தொகுதிகள், பா.ஜ., வசம் வந்துள்ளன. சிக்கிமில், பா.ஜ., கூட்டணியைச் சேர்ந்த, சிக்கிம், கிரந்திகாரி மோர்ச்சா, ஒரு இடத்தை வென்றுள்ளது.


மிசோரமில்,காங்., வசம் இருந்த ஒரு தொகுதியை, பா.ஜ., கைப்பற்றியுள்ளது. குடியேற்றச் சட்டத் திருத்தம், பா.ஜ.,வுக்கு பலத்த அடியை கொடுக்கும் என, எதிர்பார்க்கப் பட்டது. அதற்கு மாறாக, பெருவாரி இடங்களை, பா.ஜ., கைப்பற்றி. வட கிழக்கிலும், அதன் தாமரை சின்னத்தை மலரச் செய்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
27-மே-201908:52:15 IST Report Abuse

K.   Shanmugasundararajவிந்திய மலைக்கு இந்தப்பக்கம் பா ஜ க வர முடியாது. எப்படியோ தெரிந்தோ தெரியாமலேயோ , கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் மூலம் நுழைந்து விட்டது .ஹிந்தி மாநிலங்களில் கல்வி அறிவு குறைவாக உள்ளதால் தான் பா ஜ க மக்களை மடையர்களாக ஆக்கி , ஆட்சியை பிடிக்குது . அங்கும் படிப்பறிவு அதிகம் ஆகி விட்டால் பா ஜ க ./ மோடி /ஆர் எஸ் எஸ் கூட்டம் தூக்கி வீசப்படும்.

Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
27-மே-201918:17:07 IST Report Abuse

DSM .S/o PLM காங்கிரசின் தோல்விக்கான காரணத்தை ஆராய முற்படாமல், வளர்ந்து வரும் பாஜக வை குறை சொல்லிக்கொண்டும், நக்கல் செய்து கொண்டும் பொழுது போக்குவது மட்டுமே சில டுமீளர்களின் வேலை. என்னமோ காங்கிரஸ் மிகவும் வளர்ந்திருப்பது போல பிதற்ற வேண்டாம். விந்திய மலைக்கு தெற்கே பாஜக இருபத்தொன்பது இடங்களை பெற்றுள்ளது .. காங்கிரஸோ இருபத்தாறு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.. அதுவும் திமுக வின் உதவியால் .. இனியும் உண்மை என்ன என்று உணர முயற்சிக்காமல் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருந்தால் மொத்த இந்தியாவிலும் சேர்த்து காங்கிரஸ் ஒற்றைஇலக்கத்திற்கு தள்ளப்படும் நாள் தொலைவில் இல்லை . ...

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
27-மே-201919:18:15 IST Report Abuse

K.   Shanmugasundararajஆமா பா ஜ க வை / மோடியை குறை சொல்லணும்னு எங்களுக்கு ரெம்பவும் ஆசை.காங்கிரஸ் ன் தோல்விக்கு காரணம் என்னன்னு நீங்க கொஞ்சம் சொல்லுங்க மிஸ்டர்.தெய்வசிகாமணி .காங்கிரஸ் ஆ கடந்த ஐந்து ஆண்டுகள் நாட்டை ஆண்டது. 15 லட்சம் ஒவ்வொரு வோட்டருக்கும் தருவோம் அப்படின்னு மக்களை ஏமாற்றியது காங்கிரஸ் ஆ அல்லது பா ஜ க வா. பணமதிப்பிழப்பு செய்து கள்ளப்பணம் , கருப்பு பணம் , தீவிரவாதம் ஒழியும் அப்படின்னு சொன்னது ராகுலா அல்லது மோடியா.பெட்ரோல் விலை சர்வதேச அளவில் குறைந்த பின்னரும் , காங்கிரஸ் ஆட்சியை விடவும் வரியை கூட்டி, விலை குறையாது பார்த்துக்கொண்டது மோடி தானே,பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் காப்பீடு கம்பெனிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டது மோடி தானே, வேலையின்மை , 1974 ஆம் ஆண்டு அளவுக்கு பெருகியது மோடி ஆட்சியிலா அல்லது ராகுல் ஆட்சியிலா., தொழில்வளர்ச்சி குன்றியது பா ஜ க / ஆர் எஸ் எஸ் / மோடி ஆட்சியில் தானே. குழந்தைகள் நலன் குஜராத்தில் அகில இந்திய சராசரியை விடவும் குறைந்தது மோடி ஆண்ட குஜராத்தில் தானே.மோடியின் குஜராத்தில் எஸ் எஸ் சி யில் 63 பள்ளிகளில் " 0 " % ( எந்த மாணவரும் தேர்வு பெறவில்லை.). அதே நிலைமை தானே உ . பி யிலும்.உ .பி யில் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் கூட அரசு வாங்க மறுத்தது . புல்வாமாவில் தாக்குதல் நடக்கும் என்று உளவுத்துறை சொல்லியும் அதை கவனத்தில் கொள்ளாதது யார்? மோடி / நிர்மலா அவர்கள் தானே. அதை வைத்தும் அரசியல் செய்தார் மோடி. அதே போன்று போபால் தொகுதியின் பா ஜ க வேட்பாளர் , காந்தியை கொன்ற கோட்ஸே யை தேசபக்தர் என்று சொன்னாரே. அவரும் வெற்றி பெற்றுள்ளார். ஆக காந்தி தேச துரோகியாகி , கோட்ஸே தேச பக்தரானது யார் ஆட்சியில்?. பா ஜ க 1984 நிலைக்கு திரும்பும்.கவலையே வேண்டாம் தெய்வசிகாமணி சார் . ...

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
25-மே-201922:59:04 IST Report Abuse

K.   Shanmugasundararajஅந்த குடியுரிமை மசோதாவை , ராஜ்யசபாவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காது, மோடியின் குடியுரிமை மசோதாவை எதிர்த்த அஸ்ஸாம் காண பரிஷத் கட்சியுடன் கூட்டு போட்டு தான் வெற்றி பெற்றுள்ளது.கருத்து கூறுவோர் உண்மை நிலை அறிந்து கருத்து கூறவும்.

Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
27-மே-201918:20:52 IST Report Abuse

DSM .S/o PLM காங்கிரசும் தனது கொள்கைக்கு ( அப்படி எதுவும் இருந்தால் ) மாறான கருத்து உள்ள திமுக, கம்யுனிஸ்டுகளோடு கூட்டு சேர்ந்துதான் தமிழகத்தில் எட்டு இடங்களை பெற்றுள்ளது. கேரளத்தில் சபரிமலை விவகாரம் புண்ணியம் கட்டிக்கொண்டதும், பஞ்சாபில் அமர்ந்தார் சிங்கின் வலிமையாலும் தமிழகத்தில் திமுக வின் பிச்சையாலும் காங்கிரஸ் முப்பதை தாண்ட முடிந்தது.. நிதர்சனமான உண்மை .. காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது.. பாவம் இந்த சண்முகசுந்தர்ராஜ்.. உரக்க கூவிவிட்டால் தனது தரப்பின் பலவீனம் தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கிறார் ...

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
27-மே-201919:20:58 IST Report Abuse

K.   Shanmugasundararajகாங்கிரஸ் க்கும் தி மு க வுக்கும் கொள்கை வேறுபாடு உண்டு.ஆனால் தேர்தலுக்காகவே தான் குடியுரிமை மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றாது தள்ளி வைத்தார் மோடி . ...

Rate this:
25-மே-201921:46:00 IST Report Abuse

kulandhai KannanAfter making inroads in West Bengal, Odisha and North East, BJPs next target will be Kerala and Telengana. After that comes Tamil Nadu.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X