பொது செய்தி

தமிழ்நாடு

ரமலான் சிந்தனைகள்- 19

Added : மே 24, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ரமலான் சிந்தனைகள்- 19

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!

சிலர் பொய் சொல்லவும். லஞ்சம் வாங்கவும், பெண்களை ஏமாற்றவும் வெட்கப்படமாட்டார்கள். இந்த தவறைச் செய்து மாட்டிக் கொண்டால், கடும் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் தவறுகள் தொடர்கின்றன.இவர்களுக்காகத் தான் நபிகள் நாயகம் சொன்னார். “நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது,” என்று.வெட்கப்படுதல் என்பது நல்ல குணம். எந்தக் கேவலம் வந்தால் என்ன! நமக்கு தேவை பணம் என்று அஞ்சாமல் ஒரு கூட்டம் சம்பாதிக்கிறது. யார் வாழ்க்கை எப்படி போனால் என்ன... தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பொய், பித்தலாட்டம் செய்பவர்கள் பெருகி விட்டார்கள்.இப்படிப்பட்டவர்களெல்லாம், தங்கள் செயலுக்காக வெட்கப்படாவிட்டால் இறைவனிடம் தண்டனை பெற நேரிடும். தவறு செய்பவர்கள் இந்த நோன்பு காலத்தில் திருந்துங்கள். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல; இறைவனின் அன்பைப் பெறுங்கள்.இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:40 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:16 மணி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
25-மே-201902:44:23 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan சமயச்சார்பின்றி அனைத்துச் சமயச்சார்புச் செய்திகளையும் வெளியிடுவதற்குப் பாராட்டுகள் அனைவரும் நோன்பு திறக்கும் நேரம் என்கின்றனர். பகலில் இருக்கம் நோன்பைத் துறந்து மாலையில் உண்கின்றனர. எனவே, நோன்பு துறக்கும் நேரம் என்றுதான் குறிப்பிட வேண்டும். அதுபோல் நோன்பு வைக்கும் நேரம் என்பதும் சரியல்ல. நோன்பு தொடங்கும் நேரம் என்பதுதான் சரி. தினமலராவது சரியாகக் குறிக்கும் வகையில நோன்பு தொடங்கும் நேரம் என்றும் நோன்பு முடிக்கும் அல்லது துறக்கும நேரம் என்றும் குறிப்பிட வேண்டுகிறேன். இதனைப் படிக்கும் இணையப் பொறுப்பாளர்களிடம் உரியவர்களிடம்கூறி இனிச் சரியாகக் குறிக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X