President Ram Nath Kovind today hosted a banquet in honour of the outgoing Union Council of Ministers, led by Prime Minister Narendra Modi, at the Rashtrapati Bhavan | பிரதமர்- மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விருந்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர்- மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விருந்து

Added : மே 24, 2019
 பிரதமர்- மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விருந்து

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ. மெகா வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது லோக்சபாவை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது தங்களது ராஜினாமா கடிதத்தை மோடி வழங்கினார். பதவி விலகிய வர்களுக்கு ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருந்தளித்தார். இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார். இதன் புகைப்படங்கள் ஜனாதிபதி டுவிட்டர் பக்கத்தி்ல் வெளியாகியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X