பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ஒதுக்கீட்டில் 80 மாணவர்கள் சேர்ப்பு: அரசு கல்லூரி முதல்வர் தகவல்

Added : மே 24, 2019
Advertisement
 சிறப்பு ஒதுக்கீட்டில் 80 மாணவர்கள் சேர்ப்பு: அரசு கல்லூரி முதல்வர் தகவல்

கோவை:அரசு கலை கல்லுாரியில் நேற்று துவங்கிய, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில், 80 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று முதல் பொது கலந்தாய்வு துவங்கவுள்ளது.
கோவை அரசு கலை கல்லுாரியில், 22 பாடப்பிரிவுகளின் கீழ், 1,409 மாணவர்கள் கலந்தாய்வு மூலம் முதலாமாண்டில் சேர்க்கப்படவுள்ளனர்.சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று, காலை, 9:00 மணிக்கு துவங்கியது; 12:00 மணி வரை நடந்தது.விளையாட்டு பிரிவின் கீழ், 150 மாணவர்களும், என்.சி.சி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் உள்ளிட்ட பிரிவுகளில், 50 பேரும் கலந்தாய்வில் பங்கேற்றனர். பிற பிரிவுகளை காட்டிலும், விளையாட்டு பிரிவுகளில் அதிக போட்டி காணப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சித்ரா கூறியதாவது:சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், இருந்த அனைத்து இடங்களிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விளையாட்டு பிரிவின் கீழ், 42 இடங்கள் இருந்தது. 150 மாணவர்கள் அப்பிரிவில் சேர விருப்பம் தெரிவித்ததால், போட்டி நிலவியது. விதிமுறைப்படி தகுதியான மாணவர்களுக்கு விரும்பிய இடங்கள் வழங்கப்பட்டன.பிளஸ்1 சான்றிதழ் எடுத்துவர தவறிய மாணவர்களிடம், உறுதிமொழி கடிதம் பெற்றுள்ளோம். குறிப்பிட்ட சமயத்திற்குள் அச்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனில், அரசு விதிமுறைகளின் படி, சேர்க்கை ரத்து செய்யப்படும். நாளை(இன்று) பொதுகலந்தாய்வு நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X