பொது செய்தி

தமிழ்நாடு

வந்த வேலை 'ஓவர்' ஓட்டு மெஷின்கள் பயணம்

Added : மே 24, 2019
Advertisement
 வந்த வேலை 'ஓவர்' ஓட்டு மெஷின்கள் பயணம்

கோவை:கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் இருந்த, மின்னணு ஓட்டு இயந்திரங்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன், வெவ்வேறு இடங்களில் இருக்கும், பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.கோவை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை, ஜி.சி.டி., பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இங்கு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில், ஏப்.,18 இரவு முதல், நேற்று மதியம் வரை, மின்னணு ஓட்டு இயந்திரங்களும், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், மின்னணு ஓட்டு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை வெளியே கொண்டு செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.அந்தந்த சட்டசபை தொகுதி உதவி தேர்தல் அதிகாரிகள் தலைமையில், ஓட்டு இயந்திரங்கள் அனைத்தும், ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட லாரிகளில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றப்பட்டன.கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட மின்னணு ஓட்டு இயந்திரங்களும், அவற்றுக்குரிய ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும், கோவை சுகாதார துணை இயக்குனர் அலுவலக வளாக குடோனுக்கு, கொண்டு செல்லப்பட்டன.
மற்ற நான்கு சட்டசபை தொகுதிக்கு உரிய இயந்திரங்கள், தாலுகா அலுவலக வளாகங்களில் பாதுகாப்பு அறையில் ஒப்படைக்கப்பட்டன. 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில், மின்னணு ஓட்டு இயந்திரங்கள் இருக்கும்.'தேர்தல் முடிவுகள் வெளியாகி, 45 நாட்கள் வரை, வேட்பாளர்கள் யாரும் வழக்கு தொடுக்காத பட்சத்தில், மின்னணு ஓட்டு இயந்திரங்கள், மாநில அளவிலான பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X