அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தலுக்கு தேர்தல், '8' போடும் காங்.,

தமிழகத்தில், லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலில், திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்வதே, காங்கிரசின் வழக்கம்.

 தேர்தல், காங்.,



கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் மட்டுமே, தமிழக காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. கடந்த, 1991ல் நடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிட்டது. ராஜிவ் படுகொலை காரணமாக, அந்த தேர்தலில், 28 லோக்சபா தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றது.

கடந்த, 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில்,

காங்கிரசிலிருந்து பிரிந்த, த.மா.கா.,வும், தி.மு.க., வும் கூட்டணி அமைத்தன. த.மா.கா., 20 தொகுதி களில் வெற்றி பெற்றது. ஆனால், அ.தி.மு.க.,வுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, பூஜ்ஜியத்தை பெற்றது.



கடந்த, 1998 லோக்சபா தேர்தலில்,காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, படுதோல்வியை தழுவியது.அடுத்த ஆண்டே நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, இரண்டு தொகுதிகளில், வெற்றி பெற்றது.


அதன்பின், 2004 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரசுக்கு, ஒன்பது தொகுதிகள் கிடைத்தன.கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், எட்டு தொகுதிகளை கைப்பற்றியது.2014 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, பரிதாபமாக தோற்றது; பல தொகுதி களில், 'டிபாசிட்' இழந்தது.


இந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது. தேனி தொகுதியில், இளங்கோவன் தோல்வி அடைந்தார்.

Advertisement

எனவே, எட்டு தொகுதிகளை தான் காங்கிரசால் கைப்பற்ற முடிந்தது.ஏற்கனவே, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில்,தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சிக்கு, எட்டு எம்.எல்.ஏ.,க்கள் தான் கிடைத்தனர்.



எனவே, காங்கிரஸ் கட்சிக்கு, எட்டு என்ற எண் தான் ராசியாக அமைந்துள்ளது.மேலும், காங்கிரஸ், தனித்து போட்டியிடும் போது, தோல்வியும், கூட்டணி சேர்ந்து போட்டியிடும் போது மட்டும் வெற்றியும் பெற முடிந்துள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
25-மே-201921:07:22 IST Report Abuse

Rajavelதேர்தலுக்கு தேர்தல் முட்டை போடும் பிஜேபி

Rate this:
Nepolian -  ( Posted via: Dinamalar Android App )
25-மே-201917:55:46 IST Report Abuse

Nepolian இந்த சிம் ரொன்ப பெட்டர்

Rate this:
Nepolian -  ( Posted via: Dinamalar Android App )
25-மே-201917:51:07 IST Report Abuse

Nepolian இதெல்லாம் ஒரு பொலப்பு

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X