சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புலிகள் காப்பகத்தில் கடமான் வேட்டை: முக்கிய குற்றவாளி மூவர் கைது

Added : மே 24, 2019
Advertisement

ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், துப்பாக்கியை பயன்படுத்தி மான் வேட்டையில் ஈடுபட்ட வழக்கில், மேலும் மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட, செமணாம்பதி அருகே, மே 3ம் தேதி மர்ம கும்பல், ஐந்து வயதான பெண் கடமானை வேட்டையாடியது.
இவ்வழக்கில், ஆனைமலை அடுத்த மாரப்பகவுண்டன்புதுாரைச் சேர்ந்த 'லேத் ஒர்க்ஷாப்' உரிமையாளர் பாலகிருஷ்ணன், 48, கூலித்தொழிலாளி துரைசாமி, 62, பெரியபோது பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ், 51, மற்றும் கேரள மாநிலம் வன்னாமடையைச் சேர்ந்த பிரகாஸ், 29, ஆகியோரை கடந்த, 5ம் தேதி வனத்துறையினர் கைது செய்தனர்.இதில், பாலகிருஷ்ணன் 'ஒர்க்ஷாப்பில்' நாட்டு துப்பாக்கிகள் தயாரித்தது தெரியவந்தது. ஒர்க்ஷாப்பில் இருந்து, 277 தோட்டாக்கள், பாறை வெடி, மற்றும் ஒரு நாட்டு ரக துப்பாக்கி மற்றும் மூன்று துப்பாக்கிகளின் பாகங்களை பறிமுதல் செய்தனர். மான் வேட்டையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மாரப்பகவுண்டன்புதுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தமிழரசன், 47 என்பவரை, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம், வனவர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைத்து வனத்துறையினர் விசாரித்தனர். இந்நிலையில், தமிழரசனை கைது செய்து, வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்தனர்.பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறியதாவது:கடந்த, 2005ல் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் யானையை வேட்டையாடி தந்தத்தை திருடிய வழக்கில், தமிழரசன் தொடர்புடையவர்.நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர், பாலகிருஷ்ணன் உடன் இணைந்து செமணாம்பதி அருகே கடமானை வேட்டையாடி உள்ளனர்.மாரப்பகவுண்டன்புதுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, அவரை கைது செய்து விசாரித்தோம்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து என்கிற கனகராஜ், 55, வேட்டையாடப்பட்ட கடமானின் தோலை உரித்து கொடுத்தும், பெரியபோது பகுதியைச் சேர்ந்த மீன்கடை தொழிலாளி கணேஷ், 35, கடமான் கறியை கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து, தமிழரசன் மூலமாக, மற்ற இருவரையும் கைது செய்தோம். கைதான மூவரும் இதற்கு முன் மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்டவை வேட்டையாடி உள்ளனர்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X