பதிவு செய்த நாள் :
கர்நாடகாவில் காங்., படுதோல்வி
ஆட்சியை அகற்ற பா.ஜ., தீவிரம்

பெங்களூரு: கர்நாடகா லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் படுதோல்வியை சந்தித்ததால், மாநில அரசியலில், நாளுக்கொரு மாற்றங்கள் நிகழ்ந்து
வருகின்றன.

கர்நாடகா,காங்., படுதோல்வி, ஆட்சி,பா.ஜ., தீவிரம்கர்நாடகாவில், குமார சாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்நிலையில், லோக்சபா தேர்தலில், அக்கட்சியுடன் கூட்டணியை தொடர்வதன் மூலம், அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம் என, காங்., தலைவர், ராகுல் திட்டமிட்டார்.

மீண்டும் முயற்சிஇதன்படி, இந்த தேர்தலில், 21 தொகுதிகளில் காங்கிரசும், ஏழு தொகுதிகளில், ம.ஜ.த.,வும்
போட்டியிட்டன.ஆனால், எதிர்பார்ப்பை மீறி, இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. மாநிலத்தில் மொத்தமுள்ள, 28 தொகுதிகளில், பா.ஜ., 25 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.
காங்., - ம.ஜ.த., கூட்டணி, தலா, ஒரு தொகுதியில் மட்டுமே வென்றன.லோக்சபா தேர்தலுக்கு முன், மாநிலத்தில்

ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., பல முறை, 'ஆப்பரேஷன் தாமரை'க்கு முயன்று, தோல்வியை சந்தித்திருந்தது.

தற்போது, லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெரும் பாலான இடங்களை கைப்பற்றி இருப்பதால், மீண்டும் முயற்சி துவங்கியுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் தேர்தல் பிரசார கமிட்டி தலைவர், எச்.கே.பாட்டீல், தோல்விக்கு பொறுப்பேற்று, அந்த பதவியை ராஜினாமா செய்தார்.


இதைத் தொடர்ந்து, முதல்வர் குமாரசாமி தலைமையில், நேற்று மதியம், அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, குமாரசாமி தெரிவித்துள்ளார்.


தீவிர ஆலோசனைமேலும், ''பா.ஜ., ஆட்சி அமைக்க முயற்சிப்பதால், காங்கிரசை சேர்ந்தவர், முதல்வர் பதவி ஏற்கலாம்; இதற்கு, ம.ஜ.த., முழு ஆதரவு தரும்,'' என, குமாரசாமி கூறியுள்ளார்.இதை, மாநில காங்., தலைவர்கள் ஏற்றாலும், இது குறித்து ராகுலிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். அவர், குமாரசாமி யையே முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டதாகதகவல் வெளியாகியுள்ளது. தங்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் பேசி, இறுதி முடிவு எடுப்பதாக, குமாரசாமி கூறியுள்ளார்.


இதற்கிடையில், காங்., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க் களுடன், முன்னாள் அமைச்சர், ரமேஷ் ஜார்கிஹோளி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு

Advertisement

உள்ளார். அவருடன், 15 முதல், 20 எம்.எல்.ஏ.,க் கள் தொடர்பில் இருக்கலாம் என,தகவல் வெளியாகியுள்ளது.இதனால், முதல்வர் பதவியை, தலித் சமூகத்தை சேர்ந்த, பரமேஸ்வருக்கு விட்டுக் கொடுத்து, பா.ஜ., வின், ஆட்சியை கைப்பற்றும் திட்டத்திற்கு, முட்டுக்கட்டை போட, ம.ஜ.த., திட்டமிட்டு உள்ளது.

ஆனால், முதல்வர் நாற்காலி மீது கண் வைத்துள்ள, முன்னாள் முதல்வர், சித்தராமையா, இதற்கு ஒப்புக்கொள்வது சந்தேகம்.இத்திட்டத்தை, காங்., கட்சியின், அதிருப்தி, எம்.எல்.ஏ.,க் கள் ஏற்பதும் சந்தேகம் தான்.


இந்நிலையில், கர்நாடகா நிலவரம் குறித்து, டில்லியில் இன்று நடக்கவுள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், ராகுலுடன், சித்தராமையா ஆலோசிக்கவுள்ளார்.இதற்கிடையில், 'நரேந்திர மோடி, பிரதமராக பதவி ஏற்கும் வரை, ஆட்சியை கவிழ்க்க
முயற்சிக்க வேண்டாம்' என, மாநில, பா.ஜ., தலைவர், எடியூரப்பாவுக்கு, அமித் ஷா உத்தரவிட்டு உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
25-மே-201920:02:34 IST Report Abuse

ஊழல் விஞ்ஞானி தஞ்சாவூரில் தண்ணீரை பெற்றுதர ஊழல் திமுக தனது ஊழல் கூட்டணி காங்கிரஸ் கட்சியிடம் கேட்குமா?........இலங்கையில் கொலை செய்ய, 2ஜில் கொள்ளையடிக்க ,சுவீஸ் மற்றும் லணாடன்,துபாய் போன்ற இடங்களில் சொத்துக்களை சேர்க்க சேர்ந்த கூட்டம் தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டு சேருமா?.....

Rate this:
Anandan - chennai,இந்தியா
26-மே-201908:45:13 IST Report Abuse

Anandanவெட்கமேயில்லாமல் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க எங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் தர காவேரி ஆணையம் அமைக்க இழத்தடித்த பிஜேபியை ஓட ஓட விரட்டுவோம். நீங்க பண்ற பித்தலாட்டத்தை மறைக்க எப்போது அடுத்த கட்சியை குறை சொல்லி காலம் ஓட்டும் கயமையை எப்போ விடுவீங்களோ. ...

Rate this:
Panneer - Chennai,கினியா
27-மே-201912:14:17 IST Report Abuse

Panneerஉந்தலைவனே உலகமகா பொய்யன் என்று தேர்தலில் மக்கள் தெளிவாக பத்தி அளித்துள்ளனர். அப்படியிருக்க, ஊர்ப்பெயர் தெரியாத கடைமட்டத்தில் இருக்கும் உன்னிடம் எப்படி உண்மையை எதிர்பார்க்கமுடியும். ...

Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-மே-201907:57:17 IST Report Abuse

VENKATASUBRAMANIANBJP should wait . They will fight each other and topple the govt. So bjp should not spoil their name now. Siddaramaiah will take care of all this.

Rate this:
Srinivasa - Mysore,இந்தியா
27-மே-201912:20:10 IST Report Abuse

SrinivasaBJP is not doing anything. Further, BJP is not like corrupt congress to topple a government. But the small-minded JD(S) and corrupt local congressmen are creating stories to spoil the images of BJP. The main reason for them not able to work together is, under BJP these corrupts cannot make money. If they cannot make money and they have no genuine interest to serve Karnataka. For these reasons, now these corrupt feel why do they need to stay in the Assembly under pressure? ...

Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
25-மே-201906:16:45 IST Report Abuse

 nicolethomsonபாஜக எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை ஆனால் திரு சித்தராமையா மிக தீவிரமாக உள்ளார் , இந்த தோல்வி அவருக்கு மற்றும் சிவகுமாருக்கு மனப்பிரச்னையாக முன்னெடுத்து உள்ளது , கவனீதர்கள் என்றால் இந்த தேர்தலில் சிவகுமாரின் சகோதரர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் சித்தராமையாவிற்கு yp போன்று ஒரு ஆசை உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X