பயிற்சியில் ஆப்கனிடம் வீழ்ந்த பாக்.,| Dinamalar

பயிற்சியில் ஆப்கனிடம் வீழ்ந்த பாக்.,

Updated : மே 25, 2019 | Added : மே 24, 2019
Pakisthan,பாகிஸ்தான்,Afghanistan,ICC,Cricket,World Cup,Warm up match

பிரிஸ்டோல் : உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்ந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் துவங்குகிறது. பிரிஸ்டோலில் நடந்த பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், பாபர் ஆஸம் சதத்தின்(112 ரன்) உதவியுடன், 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நபி 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, ஹஸ்மதுல்லா ஷாஹி அரைசதம்(74 நாட் அவுட்) உதவியுடன் 49.4 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. வகாப் ரியாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.


தென் ஆப்ரிக்கா வெற்றி:


கார்டிப்பில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்காவுக்கு கேப்டன் பாப் டூபளசிஸ்(88), ஹசிம் அம்லாவின்(64) அரைசதத்தின் உதவியுடன், 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பு 338 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்டிய இலங்கை, 42.3 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புலுக்வாயோ அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். இன்று(மே 25) நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X