பதிவு செய்த நாள் :
புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்
பொருளாதார வல்லுனர்கள் கருத்து

புதுடில்லி:பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் அமைய உள்ள அரசுக்கு, மந்தமான பொருளாதார வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், வங்கி வாராக் கடன் உள்ளிட்ட முக்கிய சவால்கள் காத்திருப்பதாக, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசு, சவால்கள்,பொருளாதாரவல்லுனர்கள், கருத்து
ஷான் ரோச்சே, தலைமை பொருளாதார வல்லுனர், எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ்:
மத்திய அரசு, முதல் பணியாக, ஜி.எஸ்.டி., திவால் சட்டம் போன்ற, ஏற்கனவே அறிமுகமான சீர்திருத்தங்கள் வாயிலாக, முழு பலன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அடுத்து, வாராக் கடனால் பொதுத் துறை வங்கிகளின் சொத்து மதிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுத்து, செயல்திறனை மேம்படுத்த வேண்டும். வங்கி சாரா நிதி துறையில் ஏற்பட்டு உள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதும் அவசியம்.இதனால், தனியார் துறையினர்,

சுலபமாக கடன் பெறும் சூழல் உருவாகும்; வங்கிகளின் கடன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

தேவேந்திர பந்த், தலைமை பொருளாதார வல்லுனர், இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரீசர்ச்:

பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையை போக்கி,நீண்ட கால அடிப்படையில், பணவீக்கம் உயராமல் பார்த்துக் கொள்வது,புதிய அரசுக்கு உள்ள முக்கிய சவால்கள். குறுகிய கால திட்டங்கள், பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கும்.எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல், முதலீடு மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர் கள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதும் அவசியம்.


ரானன் பானர்ஜி, பொருளாதார வல்லுனர், பி.டபிள்யு.சி., இந்தியா:ஈரான் தடை, அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் போன்றவற்றால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது; ஏற்றுமதி வளர்ச்சியும் குறைந்துள்ளது.இதன் காரணமாக, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இறக்குமதியை கட்டுப்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், இந்த சவாலை சமாளிக்கலாம். 'பிரதமர் மருத்துவ காப்பீடு' போன்ற, ஏற்கனவே அறிமுகமான

Advertisement

திட்டங்களுக்கும், புதிய அரசு, அடுத்து அறிவிக்க உள்ள சமூக நலத் திட்டங்களுக்கும் போதுமான வருவாய் தேவை. மதிப்பீட்டை விட, வருவாய் குறைந்தால், அது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, நிதிப் பற்றாக் குறை க்கு வழி வகுத்து விடும்.இதை சமாளிக்கவும், அதேசமயம், வருவாய் குறை வால், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக் கான முதலீடு குறையாமல் பார்த்துக் கொள்வதும், அரசுக்கு சவாலாக இருக்கும்.


டி.கே.ஸ்ரீவத்சவா, தலைமை கொள்கை ஆலோசகர், யர்னஸ்ட் அண்டு யங் இந்தியா:


நுகர்வோரின் தேவைபாடு குறைந்து வருகிறது. அதனால், தேவையை அதிகரித்து, முதலீடு களை ஈர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.ரிசர்வ் வங்கி, இரு முறை, தலா, 0.25 சதவீதம், 'ரெப்போ' வட்டியை குறைத்தது; இது போதாது.மீண்டும், வட்டியை குறைத்து, அதன் உடன் நிதி ஊக்குவிப்பு சலுகை களை அறிவித் தால், வட்டி குறைப்பின் முழுப் பயனை பெறலாம்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A P - chennai,இந்தியா
25-மே-201918:09:26 IST Report Abuse

A PE V M இருந்ததினால்தானே, எதிர்க் கட்சிகளும் பல இடங்களை பிடிக்க முடிந்தது.

Rate this:
Manian - Chennai,இந்தியா
28-மே-201901:08:02 IST Report Abuse

Manianஅந்த இடங்களில் மட்டும் எங்கள் ஆட்கள் ஒளிந்திருந்து எங்களுக்கே ஒட்டு போட்டார்கள். ...

Rate this:
Naren - Chennai,இந்தியா
25-மே-201916:20:36 IST Report Abuse

Narenநாட்டை ஆளும் கார்ப்பரேட் (குறிப்பாக குஜராத்) சக்கரவர்த்திகளுக்கு இந்தியக் குடிமகனில் உங்களில் ஒருவனாய் எமது வேண்டுகோள்... நம் நாட்டின் மக்கள் வாழ்வாதார உயர்வில் உங்களின் பங்களிப்பு அவசியம்... நமது நாட்டின் சிறு, குறுந்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் காக்கப் படவேண்டும்... உங்கள் குழந்தைகள், குடும்பத்தார் ஆரோக்கியமான காற்று, சுத்தமான குடி நீர் பெறுவது போல் சாமனியர்கள் எங்கள் குடும்பத்தாரும் பெற்றிட மேலும் உங்கள் ஆலைகளால் மாசுபடாமல் இருக்க உறுதி செய்திட வேண்டும்... நம்து நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் மேலும் அதற்கு தேவையான நீர் ஆதாரங்கள் மேம்பட வழி செய்ய வேண்டும் மேலும் நதிகளை இணைத்திட வழி வகை செய்ய வேண்டும்... அன்றாடும் அல்லாடும் மிடில் கிளாஸ் மக்களை பாதிக்காத வண்ணம், அதிகமான அரசாங்க வரிச் சுமையை குறைத்திட வேண்டும்... இவ்வாறு செய்தீர்களானால் ஒவ்வொரு இந்தியனும் உங்கள் குடும்பங்களுக்கு கடமைப் பட்டவனாக இருப்பார்கள்...

Rate this:
Manian - Chennai,இந்தியா
28-மே-201901:15:10 IST Report Abuse

Manianஅப்பா வாஞ்சிநாதா- சுயநமலே இல்லாத நாடு என்றால் நீ கேட்பது சரி. ஓட்டை விற்கிறார்கள், மரங்களை வெட்டுகிறாரக்ள், தண்ணிர் தேவை அதிகமான பயிர்களை விளைவிக்கிறார்கள், லஞ்சம் கொடுப்பது -வாங்குவது சரி ஏற்கிறார்கள், சடடத்தை மதிப்பதில்லை, போலி கல்வி பட்டம் கேட்கிறார்கள், ஏரிகளை, குளங்களை தூர் வார உதவுவதில்லை, எந்த சமுதாய சேவையும் செய்வதில்லை, குப்பைகளை தரம் பிரித்து மக்கச்செய்ய முயற்சி செய்வதில்லை... இப்படி எல்லாவித குறைகளுடன் கவலை அற்று வாழ்பவர்களுக்கு ஓசியில் எந்த கர்ப்பூட்டும் (குஜராத்திகள் உட பட) எந்த சோம்பறி இந்தியனுக்கும் வாழ்வாதாரம் கொடுக்கவே முடியாது. குஜராத்தி பாட்டிகள் இன்றும் "டெப்லா" என்ற அரிசி ரொட்டி செய்து விற்கிறார்கள்? இங்கேயோ? நூறுநாள் திட்டம், பிரியாணி, குவார்டரு.... ...

Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
25-மே-201913:59:28 IST Report Abuse

Nallavan Nallavanஅட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுருங்க .....

Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
25-மே-201918:31:03 IST Report Abuse

N.K நல்லாட்சிக்கு அட்வைஸ் அவசியம். மோடி கேட்பார் என்று நம்புவோம். ...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X