சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை பிரதமர் அழைப்பு

Added : மே 25, 2019
Advertisement

கொழும்பு, இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் தைரியமாக வரலாம் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.இலங்கையில் ஏப்.21 ஈஸ்டர் அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 253 பேர் பலியாகினர். இதையடுத்து இலங்கைக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்தன.சுற்றுலா வருவாயை மிக முக்கிய பொருளாதாரமாக கொண்ட இலங்கைக்கு இது பெரும் சரிவை ஏற்படுத்தியது. 70 சதவீத விடுதி அறை முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, இலங்கையில் இயல்புநிலை திரும்பியுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் எந்த கவலையும் இன்றி வரலாம். தங்கள் பிரஜைகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையை நாடுகள் வாபஸ் பெற வேண்டும் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ார். சில நாட்களுக்கு முன் இதே கோரிக்கையை அதிபர் சிறீசேன வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X