அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., ஓட்டு, 18.5 சதவீதமாக சரிவு!

தமிழகத்தில் நடந்த தேர்தல்களில், இதுவரை இல்லாத அளவிற்கு, அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

 அ.தி.மு.க., ஓட்டு,  சரிவு!


தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க.,விற்கு ஓட்டு வங்கி அதிகம். ஜெய லலிதா இருந்தபோது, 1.50 கோடி பேர், அ.தி.மு. க.,வில் உறுப்பினர்களாக இருந்தனர். புதிய பதவிஜெயலலிதா மறைவுக்கு பின், பொதுச் செயலர் பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.


ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக, இ.பி.எஸ்., ஆகியோர் பொறுப்பேற்றனர்.கட்சியிலிருந்து வெளியேறிய, தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கினார். சசிகலா ஆதரவாளர்கள், அவர் பக்கம் சென்றனர். இரட்டை தலைமை காரணமாக, அ.தி.மு.க., வில், அதிரடி முடிவு களை எடுக்க முடியவில்லை. அமைச்சர்கள், தன்னிச்சையாக செயல்படத் துவங்கினர். இதனால், ஒன்றரை கோடி உறுப்பினர் எண்ணிக்கை, ஒரு கோடிக்கும் குறைவாக சரிந்தது. இது, தேர்தலிலும் எதிரொலித்து உள்ளது.

அ.தி.மு.க., தரப்பில், இம்முறை பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - புதிய தமிழகம் - புதிய நீதிக்கட்சி- த.மா.கா., - என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து, மெகா கூட்டணி அமைக்கப் பட்டது.

ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள, ஓட்டு வங்கி அடிப்படையில், இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பினர்.


ஆனால், கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளும், தங்கள் ஓட்டு வங்கியை இழந்தது தான் மிச்சம்.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 39 தொகுதிகளில் போட்டியிட்டு, 37 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது, அக்கட்சி, 44.34 சதவீத ஓட்டுகளைப் பெற்றது.


தனித்து போட்டி




கடந்த, 2016 சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தது. அப்போது ஓட்டு சதவீதம், 40.8 சதவீத மாக குறைந்தது.இந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 22 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள், 17 இடங்களிலும் போட்டியிட்டன. இதில், அ.தி.மு.க., மட்டும், ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகள், அனைத்து இடங்களிலும், தோல்வியை தழுவின.



இந்த தேர்தலில், அ.தி.மு.க., மொத்தம், 75.80 லட்சம் ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது. அதன் ஓட்டு சதவீதம், 18.5 ஆக குறைந்துள்ளது. தி.மு.க., 2014 லோக்சபா தேர்தலில், 23.61 சதவீத ஓட்டு களையும், 2016 சட்டசபை தேர்தலில், 31.6 சதவீத ஓட்டுகளையும் பெற்றது. இந்த தேர்தலில், 1.38 கோடி ஓட்டுகளை பெற்றுள்ளது. அதன் ஓட்டு சதவீதம், 32.8 ஆகஅதிகரித்துள்ளது.



அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளான, பா.ஜ., 2016 சட்டசபை தேர்தலில், 2.8 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. இம்முறை, 3.66 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது. பா.ம.க., 2016 சட்டசபை தேர்தலில், 5.3 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. இந்த தேர்தலில்,

Advertisement

5.42 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது. தே.மு. தி.க., ஓட்டு சதவீதம், 2.4ல் இருந்து, 2.19 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் ஓட்டு சதவீதம், 6.4ல் இருந்து, 12.76 ஆக அதிகரித்துள்ளது.


காரணம் என்ன?




அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்ததற்கு, ஆட்சி மீதுள்ள அதிருப்தி மட்டும் காரணமா அல்லது புதிய கட்சிகள் வரவு காரணமா என்ற, விவாதம் நடந்து வருகிறது. அ.தி.மு.க.,வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், புதிதாக துவக்கிய, அ.ம.மு.க., 21 லட்சம் ஓட்டுகள், அதாவது, 5 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றுஉள்ளது.


பங்கு




அதேபோல், நடிகர் கமலின்,மக்கள் நீதி மையம், முதல் முறையாக போட்டியிட்டு, 15.98 லட்சம் ஓட்டுகளை, அதாவது, 3.80 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. சீமானின், நாம் தமிழர் கட்சி, 2016 சட்டசபை தேர்தலில், 4.57 லட்சம் ஓட்டுகளை மட்டும் பெற்றது. இந்த தேர்தலில், 16.45 லட்சம் ஓட்டுகளை, அதாவது, 3.87 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது. அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை, இக்கட்சிகள் பங்கு போட்டதாக கூறப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-மே-201918:42:13 IST Report Abuse

D.Ambujavalliநேற்றுப் பிறந்த கமல் கட்சி மூன்று சதவீதத்துக்கு மேல் எடுத்து விட்டது . அவர் மட்டும் இன்னும் தீவிரமாகக் கட்சியை வளர்த்து, உள்ளாட்சி மூலம் நுழைந்து விட்டால்,இன்னும் இரண்டு தேர்தல்களில் பெயர் சொல்லுமளவுக்கு நிமிர்ந்துவிடலாம். மக்களுக்கும் ‘எத்தனை காலம் தான் இந்த இரண்டு ஊழல் கட்சிகளைக் கட்டி அழ வேண்டும்’ என்ற மனநிலை வரலாம். சும்மா வெற்றிக் கொக்கரிப்பும், ஆளாளுக்கு குற்ற லாவணி பாடியும் அரசியல் செய்தால் அதிக காலம் வண்டி ஓடாது

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-மே-201914:34:53 IST Report Abuse

ஆரூர் ரங்தினகரனால் அதிமுக வீக்காகிவிட்டது எனும் எண்ணம் பரவலாக இருந்தது அதனால் பல அதிமுக வாக்காளர்களே ஓட்டுபோடவரவில்லை.இப்போது தினகரன் ஒரு செல்வாக்கற்ற வெத்துவேட்டு என்பதைப்புரிந்த அதிமுக விசுவாசிகள் மீண்டும் திரும்பிவருவர் ஏற்கனவே அதிருப்தி எம் எல் ஏக்கள் அந்த முடிவை எடுத்துவிட்டார்கள் .என்றாலும் .கழகங்கள் அறவே இல்லாத தமிழகமே இனி முன்னேறும் வாய்ப்புண்டு

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-மே-201914:30:23 IST Report Abuse

ஆரூர் ரங்நகர நக்சல்களின் எண்ணிக்கை அதிகமாகி எல்லா ஜனநாயகத் தூண்களின் மீதும் காறி உமிழ்ந்து அவற்றின்மீது மக்களுக்கிருந்த நம்பிக்கையை சீர்குலைத்துள்ளனர் . அதனால நாடுமுழுவதும் மோதி வெறுப்பை சம்பாதித்துள்ளார் தோற்கப்போகிறார் என்ற எண்ணம் தமிழக,கேரள மக்களிடம் ஆழமாக ஊடுருவிவிட்டது .ஆனால் என்ன? நக்சல் இயக்கத்தின் தாயகமான மேற்கு வங்கத்தில் இதுபோன்ற நிலை பல ஆண்டுகளாக இருந்தது .இப்போது மாறவில்லையா? மாறும் மாற்றம் வந்தே தீரும்

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X