சந்திரபாபு பரிதாபமாக தோற்றது ஏன்?

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (12)
Advertisement
சந்திரபாபு நாயுடு, தேர்தல்,வாக்குறுதி, மூன்றாம் அணி, அகிலேஷ்

திருப்பதி : ஆந்திராவில் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் 40 ஆண்டு கால சந்திரபாபுவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.


தோல்வி பயம்


நதி நீர் இணைப்பு, புதிய தலைநகர் ஏற்படுத்துதல் ,போலவரம் திட்டம், ஆந்திராவின் கடைகோடி வரை விவசாய நீர், குடிநீர், தொழில் வளர்ச்சி என பல திட்டங்களை செயல்படுத்தியதால் தனக்கு வெற்றி இயல்பாக கிடைத்து விடும் என்ற இறுமாப்பில் சந்திரபாபு இருந்தார். ஓட்டு எண்ணிக்கை நாள் நெருங்கியபோது அவருக்கு தோல்வி குறித்த பயம் எழுந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மவுனம் சாதித்து வந்தார்.தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபுவின் சொந்த உழைப்பினால் உருவான கட்சியல்ல;

அது மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் உருவாக்கிய கட்சி.ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரித்த பின் ஆந்திராவை முன்னேற்ற அனுபவம் வாய்ந்த முதல்வர் தேவை என்பதால் 2014 தேர்தலில் ஆந்திர மக்கள் சந்திரபாபுவை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். புதிய தலைநகர் உருவாக்க பலர் தங்கள் நகைகள், பணம் ஆகியவற்றை அளித்தனர். புதிய தலைநகர் அமராவதியை உருவாக்க பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டன. ஆனால் அவை சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை. தலைநகரை உருவாக்க சந்திரபாபு காட்டிய அக்கறை மக்கள் நலன், பள்ளி கல்வி, விவசாயம், வேலை வாய்ப்புகளில் காட்டவில்லை.


முறைகேடு


ஆந்திராவில் முக்கிய ஸ்தலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம். ஆந்திர அரசின் வசம் உள்ள இங்கே பல முறைகேடுகள் நடக்கின்றன.கருவறையில் உள்ள ஆபரணங்கள் புதையல்கள் எடுக்கப்படுவதாகவும் ஏழுமலையான் சொத்துக்கள் கொள்ளை அடிக்கபடுவதாகவும் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் மீது சந்திரபாபு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.பின் ரமண தீட்சிதர் தன் முழு ஆதரவையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அளித்தார். இது ஆன்மிகவாதிகள் மற்றும் அர்ச்சகர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

சந்திரபாபு எந்தத் தேர்தலிலும் தனித்து நின்று வெற்றி பெற்றது இல்லை. அவரின் கூட்டணி கட்சிகளை பொறுத்து தான் அவரது வெற்றி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014 தேர்தலின்போது நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை துவக்கி சந்திரபாபு மற்றும் பா.ஜ.வுக்கு ஆதரவு அளித்தார். அவரது ரசிகர்கள் ஓட்டுகள் சந்திரபாபு மற்றும் கூட்டணி கட்சியினருக்கு கிடைத்தன.சந்திரபாபு வெற்றிக்கு இதுவும் காரணமாக இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் பவன் கல்யாண் தனித்து போட்டியிட்டார். காங். கட்சியை எதிர்த்து துவங்கப்பட்ட தெலுங்கு தேசம் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்ததும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டுக்கள் குறைய முக்கிய காரணம்.ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டியின் மறைவுக்கு பின் ஜெகன்மோகன் ரெட்டி காங். கட்சியில் இருந்து வெளியேறி 2011ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.


வாக்குறுதி


தன் தந்தையின் மறைவுக்காக ஆறுதல் யாத்திரை நடத்தி மக்களை சந்தித்தார். இருப்பினும் 2014 தேர்தலில் ஜெகன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த தேர்தலின்போது அவர் உளவு துறை ஆலோசனையை கேட்டு செயல்பட்டார். மொத்தம் 2600 கி.மீ. துாரம் பாதயாத்திரை செய்து மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டு தீர்வு காண வாக்குறுதி அளித்தார். அவரின் பிரசாரத்தில் மக்களின் பிரச்னைகளே பிரதானமாக இடம்பெற்றன. அவை தொடர்பான வாக்குறுதிகளே தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன.

இதனால் கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், ஏழை மக்கள், விவசாயிகள் , பெண்கள் என அனைவரையும் தன் வசம் இழுத்தார்.தனக்கான வாய்ப்பை சரியாக காத்திருந்து பயன்படுத்தி தனித்து நின்று வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கவில்லை எனில் தெலுங்கு தேசம் கட்சியின் நிலை கவலைக்கிடமாக மாறிவிடும் என கருதிய சந்திரபாபு பா.ஜ.கூட்டணியில் இருந்து விலகினார்.


மூன்றாம் அணி


தன்னால் தனியாக எதுவும் செய்ய முடியாது என்று கருதிய அவர் பா.ஜ.வை எதிர்க்க மூன்றாவது அணியை ஏற்படுத்த முடிவு செய்தார்.அதற்காக தேசிய தலைவர்களை சந்தித்தார். பா.ஜ.வுக்கு எதிராக செயல்பட்டார். இருந்தும் அவர் சென்ற இடமெல்லாம்அவருக்கு தோல்வியே கிடைத்தது.முதலில் காங். மூத்த தலைவர் சோனியாவை சந்தித்தார்; காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அங்கிருந்து டில்லி சென்றார். அங்கு ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி பா.ஜ.வில் இணைந்தனர்.பின் மேற்கு வங்கம் சென்றார். திரிணாமூல் காங்கிரஸ் நிர்மூலமானது. அங்கிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்றார். அங்கு குமாரசாமிக்கும்தோல்வி.

பின் உ.பி.யில் மாயாவதி அகிலேஷை சந்தித்த நிலையில் அவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. சந்திராபாபு சந்தித்தும் வெற்றி அடைந்த ஒரே நபர்தமிழகத்தில் ஸ்டாலின் மட்டுமே.மற்ற அனைவரும் கடும் பின்னடைவை சந்தித்தனர். சந்திரபாபு திட்டம் அவரை மட்டுமல்லாமல் அவர் சார்ந்த கட்சிகள் அனைத்தையும் சீரழித்தது.மக்கள் ஆட்சியில் மக்கள் பிரச்னைகளை அறிய நேருக்குநேர் சென்று அவர்கள் இடத்தில் அவர்களை சந்திக்க வேண்டும்என்பதை மறந்த சந்திரபாபுவுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு வரலாறு காணாத படுதோல்வி.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-மே-201916:54:02 IST Report Abuse
இந்தியன் kumar இருக்கிறதை விட்டு விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டார் எதுவும் கிடைக்காமல் போய் விட்டது.
Rate this:
Share this comment
Cancel
25-மே-201911:38:49 IST Report Abuse
kulandhai Kannan Naidu wanted to be kingmaker of India but lost his own kingdom of Andhra.
Rate this:
Share this comment
Cancel
vvkiyer - Bangalore,இந்தியா
25-மே-201909:37:29 IST Report Abuse
vvkiyer Leaders of Telugu Desam Party and Congress tare responsible for promoting Mr.Chandrasekhara Rao and th the creation of Telegana State. Though promises were held out to Telengana Leaders to accommodate in the Minstry, the promises were not kept. Dr. Channa Reddi was given a lolly pop (Posted as Governor of Tamilnadu) and silenced. Added, MsSonia Gandhi wanted a check for Chandra Babu Naidu, who was then close to BJ and d Telengana State.Mr. Naidu had done good work for Hyderabad, which went to Mr.Chandrasekhara Rao in a platter.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X