அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேமுதிகவிற்கு இறுதி அத்தியாயம் எழுதிய பிரேமலதா; கட்சியினர் காட்டம்

Added : மே 25, 2019 | கருத்துகள் (17)
Advertisement
சென்னை ,  லோக்சபா, விஜயகாந்த்,  பிரேமலதா, தோல்வி,  இறுதி அத்தியாயம்

சென்னை : 'தே.மு.தி.க.,விற்கு இறுதி அத்தியாயத்தை, பிரேமலதா எழுதிவிட்டார்' என, சமூகவலைதளங்களில், அக்கட்சியினர் பதிவுகளை வெளியிட துவங்கி உள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின், ஓய்வெடுத்து வருகிறார்.

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள், விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விஜயகாந்திற்கு ஓய்வு கொடுத்து விட்டு, அவருக்கு பதிலாக கூட்டணி முடிவுகளை, பிரேமலதா எடுத்தார். ஆரம்பத்தில், கூட்டணியை இறுதி செய்யாமல் இழுத்தடித்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் மீதும் கோபப்பட்டார்.

ஒரு வழியாக, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது.செல்வாக்கு இல்லாத தொகுதிகள் என்று தெரிந்தும், ஏதோ ஒரு காரணத்திற்காக, அவற்றை பிரேமலதா ஏற்றார். இந்த தொகுதிகளில், சரியான வேட்பாளர்களையும், அவர் நிறுத்தவில்லை.

கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட, இவரின் சகோதரர், சுதீஷை தவிர்த்து, மற்ற மூவரும், தேர்தல் செலவிற்கு பணம் இல்லாமல் திணறினர்.கட்சி பொருளாளர் என்ற அடிப்படையில், அவர்களுக்கு எவ்வித உதவிகளையும் பிரேமலதா செய்யவில்லை. இதனால், அ.தி.மு.க., கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வெறுப்புக்கு, தே.மு.தி.க., வேட்பாளர்கள் ஆளாகினர். தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் பணபலம், படை பலத்தை எதிர்கொள்ள முடியாமல், தே.மு.தி.க., வேட்பாளர்கள் படுதோல்வியை தழுவியுள்ளனர்.

கட்சிக்கு, 3 சதவீத ஓட்டுகள் கூட கிடைக்கவில்லை. பிரேமலதாவின் தவறான வழிநடத்தலே, கட்சியின் தோல்விக்கு காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.'விஜயகாந்த் துவக்கிய கட்சிக்கு, பிரேமலதா இறுதி அத்தியாயத்தை எழுதிவிட்டார்' என, சமூகவலைதளங்களில், தே.மு.தி.க.,வினர் கொந்தளிக்க துவங்கியுள்ளனர்.இது, தே.மு.தி.க.,வில் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prem - Madurai ,இந்தியா
28-மே-201914:12:28 IST Report Abuse
prem இந்த குட்டன் மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து பேசி கூட்டணியை முறிக்கவில்லை... தனக்கும், தனது குடும்பத்திற்கும் பணம் சம்பாதிக்க தமிழக மக்களின் குடியை கெடுக்கும் சாராய ஆலை அமைக்கவும், தனது குடும்பத்திற்கு ஒரு தனியார் மருத்துவ கல்லூரி கேட்டும் அது ஜெயலலிதாவிடம் கிடைக்காததால் ஆவேசப்பட்டு பிளேட்டை மாற்றி ஒட்டுகாக நீலிக்கண்ணீர் வடித்து விட்டார்... கூட்டணி தர்மத்தால் ஜெயலலிதா அதனை வெளியிடவில்லை.... உண்மையான மக்கள் துரோகம் என்றும் விடாது.... அது போல இந்த தேர்தலிலும் பிரேமாவும் அவர் மகன்களும் இல்லாத பீல்ட் அப் கொடுத்து அதிமுக விடம் நிறைய சில்லறையை தேற்றி செட்டிலாகி விட்டனர்.... என்ன ஒன்னு மக்கள் மன்றத்தில் செல்லாக்காசாகி விட்டனர்.... இந்த அம்மாள் என்ன என்ன பேசினால் தேர்தலுக்கு முன் என்பது கடவுளுக்கே வெளிச்சம்... எதோ தன புருஷனால் தான் ஜெயலலிதா 2011 ல் முதல்வரானார் என்பதும், அவர் எதோ ஜெயலலிதாவுக்கு பதவி பிட்சை போட்ட கடவுள் என்றும் தகுதியில்லாத மொழிகளை அள்ளி வீசினால்... தேமுதிக என்ற மக்கள் துரோக கட்சி ஒழிந்து விட்டால் தமிழக மக்கள் கடவுள் உட்பட அனைவரும் சந்தோசமே அடைவார்கள்.... (ஆமாம்//// கடவுளுக்கும் தமிழக மக்களுக்கும் கூட்டணி நெருக்கடி குறையும்...)
Rate this:
Share this comment
Cancel
Man -  ( Posted via: Dinamalar Android App )
25-மே-201913:58:34 IST Report Abuse
Man aproom illuthu muda vendiyathuthan
Rate this:
Share this comment
Cancel
xerox - ,
25-மே-201912:18:38 IST Report Abuse
xerox நாய குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால்???!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X