திரிணமுல் தலைவர்களிடம் மம்தா இன்று ஆலோசனை

Added : மே 25, 2019 | கருத்துகள் (13)
Advertisement
கோல்கட்டா, மம்தா பானர்ஜி, இடதுசாரி, திரிணமுல், மேற்கு வங்கம்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், லோக்சபா தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியை அடுத்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.,க்களை, இன்று சந்தித்து, முதல்வர், மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்துகிறார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, லோக்சபா தேர்தல் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், மேற்கு வங்கத்தில், மொத்தம் உள்ள, 42 தொகுதிகளில், 22ல் மட்டுமே திரிணமுல் காங்., வெற்றி பெற்றது .இதுவரை இல்லாத அளவில், 18 தொகுதிகளில் வென்று, பா.ஜ., சாதனை படைத்தது. காங்., இரண்டு தொகுதிகளில் வென்றது.மாநிலத்தில், 34 ஆண்டு களுக்கு மேல் ஆட்சி செய்த இடதுசாரிகள், இந்த தேர்தலில் படுதோல்வியடைந்து, காணாமல் போய்விட்டனர்.

திரிணமுலுக்கும், பா.ஜ.,வுக்கும், ஓட்டு சதவீதத்திலும் பெரும் வித்தியாசம் இல்லை. திரிணமுல், 43.28 சதவீத ஓட்டுகளும், பா.ஜ., 40.25 சதவீத ஓட்டுகளும் பெற்று உள்ளன. இடதுசாரிகள், 6.28 சதவீத ஓட்டுகளும், காங்., 5.61 சதவீத ஓட்டுகளும் பெற்று உள்ளன.முதலில், காங்., பின், இடதுசாரிகள், இப்போது, திரிணமுல் கோட்டையாகி யிருக்கும் மேற்கு வங்கத்தில், பா.ஜ., 18 இடங்களை கைப்பற்றியதுடன், ஓட்டு சதவீதமும் அதிகரித்துள்ளது, மம்தா பானர்ஜிக்கு கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.,க்களை, மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள தன் வீட்டில், இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இது பற்றி, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசிக்க, கட்சியின் மூத்த தலைவர்கள், வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களை, முதல்வர் மம்தா இன்று சந்திக்கிறார்.தேர்தல் முடிவுகள், எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இப்படி ஒரு முடிவை, நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எங்கு தவறு நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்வோம்.மாநிலத்தில், எங்களை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பா.ஜ.,வுக்கு, இடதுசாரி கள் மறைமுக ஆதரவு அளித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
25-மே-201914:35:35 IST Report Abuse
Aarkay இவ்வளவு குண்டர்களை களத்தில் இறக்கியும் எப்படி தோற்றோம்? என கேட்டிருப்பார் அடுத்த சட்டசபை தேர்தலில், மேற்கு வங்கத்திலும், காஷ்மீரிலும், கர்நாடகாவிலும் தாமரை மலரும்.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-மே-201910:46:11 IST Report Abuse
அசோக்ராஜ் சாரதாவில் கைதாகாமல் தப்பிக்க ஆலோசனை செய்திருப்பார். பாடிகார்டு ராஜீவ்குமார் பெயில் கிடைக்காமல் தில்லிக்கும் கொல்கத்தாவுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறான். கைதானபின் அவன் அப்ரூவர் ஆகிவிட்டால் மாவோ மாதாவும் சிறைக்குப் போகவேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
25-மே-201908:02:19 IST Report Abuse
pannadai pandian Mamtha Banerjee is a thug. she illegally settled lakhs of Bangla muslims to harvest their votes. This sort of anti-natioal activity was done by congress in Assam and marginalised original descendant hindus. communists, congress and mamtha did the same in west bengal. Just compare punjab and Bengal. During partition, all muslims moved to pakistan and present Bangladesh. punjab still have very minimum muslim population where as west Bengal has 30% . These muslim were imported by congress during 1970s and later communists during 80s and 90's and now by mamtha. The all India muslim population per state is less than 5% where as in West Bengal it is wooping 30%. All are bangladeshis who are risk to our national security.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X