அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?

Added : மே 25, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Chennai, சென்னை, எம்.எல்.ஏக்கள், பதவியேற்பு, இடைத்தேர்தல்

சென்னை : தமிழக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள், அடுத்த வாரம் பதவியேற்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கு, சமீபத்தில், தேர்தல் நடந்தது.

நேற்று முன்தினம் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அ.தி.மு.க., ஒன்பது தொகுதிகளிலும், தி.மு.க., 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. புதிதாக தேர்வான, எம்.எல்.ஏ.,க்கள், அடுத்த வாரம் பதவியேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:தேர்தலில் வெற்றி பெற்றதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த பின், எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை சந்தித்து, விபரம் தெரிவிப்பர்.

அவர்கள் விரும்பும் நாளில், சபாநாயகர் அறையில், பதவியேற்று கொள்ளலாம். நல்ல நாள் பார்த்து பதவியேற்பர்; பெரும்பாலும் அடுத்த வாரம் பதவியேற்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.முதல்வரிடம் வாழ்த்துசட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது. சோளிங்கர் - சம்பத், விளாத்திகுளம் - சின்னப்பன், நிலக்கோட்டை - தேன்மொழி ஆகிய, மூன்று எம்.எல்.ஏ.,க்களும், நேற்று முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், பன்னீர்செல்வம் ஆகியோரை, அவர்களின் வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
25-மே-201916:30:10 IST Report Abuse
rm How can they laugh.?This is not a success. They compromise jaya vote bank with BJP.
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
25-மே-201913:39:10 IST Report Abuse
S.P. Barucha முதல்வரை பற்றி அவதூறு ஆட்சியை பற்றி அவதூறு , எதற்கெடுத்தாலும் வழக்கு பதிவு செய்வது,
Rate this:
Share this comment
Cancel
விமர்சகன் - kovai,இந்தியா
25-மே-201910:13:09 IST Report Abuse
விமர்சகன் ஸ்டாலின் கனவை மக்கள் ஒன்றும் த. யார் தகர்த்தார்கள் எப்படி தகர்க்கப்பட்டது என்பதை, நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி இவர்களின் பேட்டியின் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம. பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியிலும் அதிமுக வென்ற 9 தொகுதிக்கும் 100% ஒப்புகைச் சீட்டு களை சரி பார்த்தால் உண்மை அனைவருக்கும் தெரிந்துவிடும். ஆனால் அது நடக்காது. திமுகவே அது பற்றி கேட்காது அது தான் சிதம்பர ரகசியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X