புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?

Added : மே 25, 2019 | கருத்துகள் (5)
Chennai, சென்னை, எம்.எல்.ஏக்கள், பதவியேற்பு, இடைத்தேர்தல்

சென்னை : தமிழக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள், அடுத்த வாரம் பதவியேற்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கு, சமீபத்தில், தேர்தல் நடந்தது.

நேற்று முன்தினம் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அ.தி.மு.க., ஒன்பது தொகுதிகளிலும், தி.மு.க., 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. புதிதாக தேர்வான, எம்.எல்.ஏ.,க்கள், அடுத்த வாரம் பதவியேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:தேர்தலில் வெற்றி பெற்றதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த பின், எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை சந்தித்து, விபரம் தெரிவிப்பர்.

அவர்கள் விரும்பும் நாளில், சபாநாயகர் அறையில், பதவியேற்று கொள்ளலாம். நல்ல நாள் பார்த்து பதவியேற்பர்; பெரும்பாலும் அடுத்த வாரம் பதவியேற்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.முதல்வரிடம் வாழ்த்துசட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது. சோளிங்கர் - சம்பத், விளாத்திகுளம் - சின்னப்பன், நிலக்கோட்டை - தேன்மொழி ஆகிய, மூன்று எம்.எல்.ஏ.,க்களும், நேற்று முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், பன்னீர்செல்வம் ஆகியோரை, அவர்களின் வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X