மதம், ஜாதியின் பெயரில் கட்சிகள்; விளக்கம் கேட்கிறது கோர்ட்

Added : மே 25, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
மதம், ஜாதி,கட்சிகள்,Court,கோர்ட்,நீதிமன்றம்

புதுடில்லி: மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் பெயர் வைத்துள்ள, அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற டில்லி உயர்நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், பிரபல வழக்கறிஞருமான, அஸ்வினி குமார் உபாத்யாயா, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள, பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சில அரசியல் கட்சிகள், மதம், ஜாதி மற்றும் மொழி அடிப்படையில், தங்கள் கட்சிகளுக்கு பெயர் வைத்துள்ளன. வேறு சில கட்சிகள், தங்கள்கட்சிக் கொடியை, தேசியக் கொடியை போன்று வடிவமைத்துள்ளன; இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

நேர்மையான, சுதந்திர மான தேர்தல் நடவடிக்கைகளுக்கு, இது, எதிராக உள்ளது. இது போன்ற கட்சிகள், மூன்று மாதங்களுக்குள், தங்கள் பெயர் மற்றும் கொடிகளை மாற்றாவிட்டால், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி, ராஜீந்தர் மேனன் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :இந்த மனு, ஜூலை, 17ல் மீண்டும்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் கட்சிகளுக்கு பெயர் வைத்துள்ளது பற்றிய விவகாரத்தில், மத்திய அரசு, தன்விளக்கத்தை, பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-மே-201915:55:56 IST Report Abuse
Endrum Indian உச்சா நீதிமன்றம் தீர்ப்பு வேடிக்கையிலும் வேடிக்கையாய் இருக்கப்போகிறது? எப்போது தீர்ப்பு வரும் 2035 ல் ??? உண்மையிலேயே இது உச்ச நீதிமன்றம் என்றால் இதன் தீர்ப்பு 30 ஆந்தேதி மே 2019 ல் வரவேண்டும் . வருமா???வரவே வராது??????
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
25-மே-201914:31:06 IST Report Abuse
ராம.ராசு "சில அரசியல் கட்சிகள், மதம், ஜாதி மற்றும் மொழி அடிப்படையில், தங்கள் கட்சிகளுக்கு பெயர் வைத்துள்ளன" என்பது உண்மையாக இருக்குமேயானால் மக்களாட்சி நாட்டில் அது மிகத் தவறானது. வழக்கின் நோக்கம் நாட்டின் ஒற்றுமையை வளர்ப்பதற்க்கானது. ஆனால் "இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது' என்று எதற்க்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பெருமாபாலன காட்சிகள் ஜாதி சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. அரசியல் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டாலும் தங்கள் அதிகாரம் பெறவேண்டும் என்ற நோக்கில் சாதித் தலைவர்கள் சாமானிய மக்களை பிரித்து வைத்து க்கொண்டுள்ளார்கள் என்பது எதார்த்த, வெளிப்படையான ரகசியம். சாதிப்பெருமைகளை மக்கள் மனத்தில் திணித்து, பழமையாகிப்போன ஆண்ட பரம்பரை என்றெல்லாம் அந்த மக்களை உசுப்பேற்றி மற்ற சாதிகள் மீது, குறிப்பாக தலித் சமுதாயத்தின் மீது வெறுப்பு உணர்வை ஏற்படுத்துகிறார்கள் என்பது எதார்த்த உண்மை. மேல் சாதி கீழ் சாதி என்ற வழக்கம் உள்ள நமது நாட்டில், சாதி அமைப்புகள் என்பது ஒன்று ஆதிக்கம் செலுத்துவதற்காகவும், அதைத் தக்க வைத்துக்கொள்ளவும். இன்னொன்று தங்களை அடிமைப்படுத்துபவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ளவும், மக்களாட்சி நாட்டில் அடிமைப்பட்டு இருக்கக் கூடாது என்பதற்காவும் இழிவாகப் பார்க்கும் மனப்போக்கு இல்லாமல் போகவேண்டும் என்பதற்காகவும்தான். அடிமைப்படுத்திப் பார்க்கின்ற உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும், சாதிச் சமுதாயம் இல்லாமல்போகுமேயானால், இயல்பாகவே அந்த சமுதாயத்தின் மீதான எதிர்ப்பும் தலித் சமுதாயத்திடம் இல்லாமல் போகும். இதற்க்கு தேர்தல் ஆணையமே எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது ஆச்சரியம். இன்னும் சொல்லப்போனால் தேர்தல் ஆணையம்தான் இப்படியான வழக்கை தொடுத்து இருக்கவேண்டும். குறைந்தபட்சம் எதிர்ப்பு தெரிவிக்காமலாவது இருந்திருக்கலாம்.
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
25-மே-201912:43:11 IST Report Abuse
Varun Ramesh 1947 தொடங்கி இன்று வரையிலும் சாதி குறித்து விண்ணப்பங்களில் கேட்பதையும் அதனை நிரூபிக்க சாதி சான்றிதழை அரசே வழங்குவதையும் கேட்காத நீதி மன்றம் கட்சிகளின் பெயரில் சாதிகள் இருப்பதை கேட்கிறதா? கட்சிகளில் சாதிப்பெயர் இருப்பது நல்லது தான். அப்போதுதான் பிற சாதிக்காரர்களால் ஒதுக்கப்படுவார்கள். தாமாகவே அழிந்து போவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X