அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல்

Added : மே 25, 2019 | கருத்துகள் (44)
Advertisement
கமல்,ம.நீ.ம,அணுகுமுறை,அதிக ஓட்டு, பிரசாரம்

மதுரை : வளர்ந்த நகரங்களில் தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு அடுத்தப்படியாக அதிக ஓட்டுகளை அள்ளிய கமலின் மக்கள் நீதி மய்யம், கிராமப்புறங்களில் சறுக்கி உள்ளது.

முதல் தேர்தலை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யம் ஒரு லோக்சபா தொகுதியை கூட கைப்பற்றவில்லை. ஆனால் 15 லட்சத்து 75 ஆயிரத்து 620 ஓட்டுகளை பெற்று, முதல் தேர்தலிலேயே 3.71 சதவீதம் ஓட்டுகளை வசப்படுத்தி உள்ளது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதுார், திருப்பூர், மதுரை உட்பட 13 லோக்சபா தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது இடத்தை தனதாக்கி உள்ளது.

போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோய் இருந்தாலும் கூட, அக்கட்சி பெற்ற ஓட்டு விகிதம் நல்ல துவக்கத்தை தந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மாற்றாக ஒரு கட்சியை விரும்பியவர்கள், புதிய வாக்காளர்கள் ஓட்டுகளின் பெரும்பகுதியை கமல் அறுவடை செய்துள்ளார்.

வடசென்னையில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 167, தென்சென்னையில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465, கோவையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 104, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 525 ஓட்டுகளை மக்கள் நீதிமய்யம் வேட்டையாடி உள்ளது. மத்திய சென்னை (92,249), மதுரை (85,048), திருவள்ளூர் (73,731), திருப்பூர் (64,657) தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் கிடைத்துள்ளன.

அதாவது சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் போன்ற நகரங்களில் கமலுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. ஆனால் கிராமப்புற மக்களின் ஓட்டுகளை ஈர்ப்பதில் பெரிய அளவில் கமல் வெற்றிபெறவில்லை. அவரது பிரசாரமும், அணுகுமுறையும் கிராம மக்களிடம் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
28-மே-201908:27:04 IST Report Abuse
K.   Shanmugasundararaj நாம் தமிழர் கட்சி சீமானுக்கு கிடைக்காத வாய்ப்பு கமலுக்கு , மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு கிடைத்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-மே-201921:33:53 IST Report Abuse
அசோக்ராஜ் நான்தான் ராஜான்னு சொல்லிக்கிட்டு வந்தான். ஜனங்க ஒப்புக்கல்லை. நீ ராஜா இல்ல, அப்பு. உனக்கு 2.88- சதவீதம் போதும்னுட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel
மதம் மறைக்காதவன் ஆமா, மத்த இடங்களிலெல்லாம் இவர் ஓட்டுக்களை குவித்து தள்ளிவிட்டார், கிராமத்தில் மட்டும்தான் சறுக்கல். இது ஒரு காமெடி பீசு, அத வெச்சி செய்துட்டாங்க தமிழக வாக்காளர்கள். இனிமே கோமான்கள், வளவளர்கள், கோரமணிகளெல்லாம் தமிழனின் பகுத்தறிவின்முன் கால்தூசுகூட பெறமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
26-மே-201906:39:48 IST Report Abuse
Sathya Dhara ஆமாம் இந்த தீய சக்திகளின் மொத்த அவதார புருஷனுக்கு ...இவனை பற்றி ஒரு செய்தி...ஒரு விமர்சனம்.....தேவை இன்றி நாமே இது போன்ற தீய சக்திகளை வளர்த்து விடுகிறோம். இந்த தீய சக்தியை பற்றி எந்த பத்திரிகையும் செய்திகள் போடக்கூடாது. தீய சக்தியின் பெயரோ படமோ இடம் பெற வேண்டிய அவசியமே இல்லை. பொது மக்கள் சினிமா மோகத்தில் இருந்து திருந்தி வாழ வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X