தமிழ்நாடு

பிளாஸ்டிக் கவரில் ஆப்பிள், மாதுளை விற்பனை: மாநகராட்சி தடுப்பு குழு மாயம்

Added : மே 25, 2019
Share
Advertisement

சேலம்: புது பஸ் ஸ்டாண்டில், பிளாஸ்டிக் கவரில், ஆப்பிள், மாதுளை விற்பனை நடக்கிறது. இதை தடுக்க அமைக்கப்பட்ட, மாநகராட்சி குழு மாயமானதால், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், 14 வகையான, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த ஜன., 1 முதல், தமிழக அரசு தடை விதித்தது. இவற்றை அமல்படுத்துவதற்கான பொறுப்பு, உள்ளாட்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சி சார்பில், சிறப்பு குழு அமைத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜனவரி முதல் வாரத்தில், டன் கணக்கில், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், சிறியது முதல், பெரிய நிறுவனங்கள் வரை, பிளாஸ்டிக் பைகளுக்கு, மாற்றுப்பொருட்களை தேடத்தொடங்கினர். மக்களும், துணிப்பைகளை எடுத்துச்செல்ல தொடங்கினர். ஆனால், தடை மீதான நடவடிக்கை குறைய தொடங்கவே, மீண்டும் சிறிது சிறிதாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், ரோந்து உள்ளிட்ட தேர்தல் பணிகளில், உள்ளாட்சி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், பிளாஸ்டிக் சோதனை என்பதே இல்லாமல், மாநகராட்சி தடுப்பு குழு மாயமாகிவிட்டது.

இதை சாதகமாக்கிக்கொண்டதால், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, மீண்டும் பழைய நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, சேலம், புது பஸ் ஸ்டாண்டில், பிளாஸ்டிக் கவர்களில், ஆப்பிள், மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகளை விற்கின்றனர். மேலும், அனைத்து கடைகளிலும், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, சேலம் மாவட்டத்திலும், தெருவோர கடைகள், நடைபாதை வியாபாரிகள் என, அனைத்து இடங்களிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு, சர்வசாதாரணமாக பயன் படுத்தப்படுகிறது. மறைத்து வைத்து வியாபாரம் செய்து வந்த பிளாஸ்டிக் வியாபாரிகள் கூட, தற்போது பகிரங்கமாக விற்க தொடங்கியுள்ளனர். தற்போது, தேர்தல் பணி நிறைவடைந்தததால், பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல் படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X