கருணாநிதி நினைவிடத்தில் திமுக அஞ்சலி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் திமுக அஞ்சலி

Added : மே 25, 2019 | கருத்துகள் (22)
திமுக., ஸ்டாலின், அஞ்சலி, கருணாநிதி நினைவிடம்

சென்னை : லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி., மற்றும் எல்.எல்.ஏ.,க்களுடன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஊர்வலமாக சென்று சென்னை கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி, தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 ல் வெற்றிபெற்றது. அதேபோல இடைத்தேர்தல் நடந்த 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 தொகுதிகளில் வென்றுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் இன்று (மே 25) சென்னை உழைப்பாளர் சிலை அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், கனிமொழி எம்.பி., உள்ளிட்டோரும், மூத்த நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் ஊர்வலமாக சென்று கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் மரியாதை செய்தனர். பின்னர் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே இன்று மாலை, 5:00 மணிக்கு, கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடக்கிறது. அதில், லோக்சபாவில், புதிய எம்.பி.,க்கள் எப்படி செயல்படுவது என்பது குறித்தும், சட்டசபை மற்றும் தொகுதிகளில், எம்.எல்.ஏ.,க்களின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X