புதுடில்லி: புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
66 வயதாகும் ஜெட்லி சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்த முறை மத்திய நிதியமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வேளை ஜெட்லிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தாலும் அதிக வேலை பளு இல்லாத பொறுப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது. அத்துடன், மத்திய அமைச்சர் பொறுப்பிற்காக தனது பெயர் பரிந்துரைக்கப்படுவதை ஜெட்லியும் விரும்பவில்லை என கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.,வை பொறுத்தவரை அமித்ஷா, மோடிக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இருப்பவர் அருண் ஜெட்லி. இருப்பினும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்ற பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, மோடியும் அமித்ஷாவும் உரையாற்றிய இடத்தில் அருண் ஜெட்லி இல்லை. கடந்த 2 வாரங்களாகவே ஜெட்லி, வெளியில் முகம் காட்டாமல் வலைதளம், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் மட்டுமே கருத்தை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சிருநீரக அருவை சிகிச்சை செய்து கொண்ட ஜெட்லி, அடிக்கடி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதையே ஜெட்லியின் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE