ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் இன்று தேர்வு

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜெகன்மோகன், ஆந்திரா, ஒய்எஸ்ஆர்காங்கிரஸ், விஜயவாடா

விஜயவாடா: ஆந்திரத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று (மே 25) அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
ஆந்திரத்தில் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 151 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் கூட்டம் விஜயவாடாவில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முறைப்படி சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்படார்.
இதைத் தொடர்ந்து, ஆந்திரப்பிரதேச கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மனை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். வரும் 30ம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார்.
பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senkolselvan - Coimbatore,இந்தியா
25-மே-201915:13:53 IST Report Abuse
Senkolselvan இளம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. நீங்களும் உங்க அப்பாவை போல திறமையான ஆட்சியை ஆந்திர மக்களுக்கு தாருங்கள் .. மேலும் ஊழலற்ற ஆட்சிக்கு வித்திடுங்கள் .. வாழ்க வளமுடன் ..
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
25-மே-201914:28:00 IST Report Abuse
sundarsvpr தீராத வினையெல்லாம் தீர்க்கும் மலை திருமலை. திருமலை முழுவதும் ஹிந்துக்கள் மலை. பதவி ஏற்கும்போது இதனை கருத்தில்கொண்டால் போதும். எல்லாம் நல்லவையாய் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
Nisha Rathi - madurai,இந்தியா
25-மே-201913:14:20 IST Report Abuse
Nisha Rathi ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்துக்கள் சந்திரபாபு என்ற அரக்கனை வெளியேற்றிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
A P - chennai,இந்தியா
25-மே-201918:02:20 IST Report Abuse
A Pஜெகன் இந்து மதத்துக்கு மாறிவிட்டதாக வாட்ஸப் வீடியோ ஒன்று பார்த்தேன் . இது உண்மையாக இருந்து அதுவும் ஜெகன் கடைசி வரை இந்து வாக இருந்தாரே ஆனால் முதலில் சந்தோஷப் படுபவன் நானாகத் தான் இருப்பேன். இந்துக்களுக்கே சொந்தமான திருமலை தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலெல்லாம் ஒரே ஒரு வேற்று மதத்தவனும் வேலையில் இருக்கக் கூடாது என்பதே அனைத்து இந்துக்களின் விருப்பம். ஏனெனில் அது இந்துக்களுக்கும் இந்து கோவிலுக்கும் ரொம்ப ஆபத்து . எண்ணிப் பார்த்தால் இதர மத பிரார்த்தனை கூடங்களில், இந்துவானவன் அது ரொம்ப கேவலம் என்றெண்ணி வேலையில் இருப்பதில்லை. இந்த புத்தி மற்ற மதத்தவனுக்கும் இருக்க வேண்டும். முதலமைச்சராகும் திரு ஜெகன் இதனைக் கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X