ஆட்சியை காப்பாற்ற குமாரசாமி வியூகம்

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (17)
Advertisement
கர்நாடகா, காங்., குமாரசாமி, பா.ஜ.,

பெங்களூரு : லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ., பெற்ற அமோக வெற்றியால், மாநில அரசுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் உள்ளன. இதனால் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வியூகம் அமைத்து வருகின்றன.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக காங் - மஜத கூட்டணி அமைக்கப்பட்டது. இருந்தும் தேர்தலுக்கு பிறகு கடந்த ஓராண்டாக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதல்வர் குமாரசாமி, காங்., எங்களை செயல்படவிடாமல் கட்டுப்படுத்த பார்க்கிறது. எதிர்க்கட்சிகளும் தங்கள் அரசை செயலற்றதாக்க திட்டமிட்டுள்ளன. கூட்டணி அரசு நடத்துவது விஷத்தை விழுங்கியதற்கு சமம். இதனால் தான் பதவி விலக முடிவு செய்திருப்பதாக கூறினார்.
ஆனால் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்தால், அது பா.ஜ., ஆட்சிக்கு வர வழிவகுக்கும் என்பதால் காங்., அவரை தடுத்தது. இந்நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 ல் பா.ஜ., வெற்றி பெற்றது. காங் மற்றும் மஜத தலா ஒரு இடத்தை பெற்றன. காங்., சீட் தராததால், பா.ஜ., ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதா வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.,வின் இந்த பிரமாண்ட வெற்றி, ஆளும் கூட்டணியை கதிகலங்க வைத்துள்ளது.
ஏற்கனவே பா.ஜ.,வின் எடியூரப்பா, லோக்சபா தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என கூறி இருந்தார். இதனால் கூடுதலாக அச்சத்தில் இருக்கும் மஜத - காங்., கூட்டணி, தங்களின் கூட்டணி ஒற்றுமையை காட்டி முதல்வர் குமாரசாமியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என எம்எல்ஏ.,க்களிடம் கூறி வருகின்றன.
அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் சமீபத்தில் பதவி விலக போவதாக கூறி இருந்த எம்எல்ஏ.,க்கள் மற்றும் காங் உடனான கூட்டணி காரணமாக அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏ.,க்களையும் பா.ஜ., அணுகுவதற்கு முன் சமாதானம் செய்யும் முயற்சியில் காங் - மஜத கூட்டணி இறங்கி உள்ளது. எம்எல்ஏ.,யாரும் பா.ஜ., பக்கம் சென்று விடாமல் இருக்கவும், வேறு வழிகளில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுக்கவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
26-மே-201915:19:31 IST Report Abuse
sundarsvpr ஆழம் தெரியாமல் காலை விடுவது காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்துவது. ஒரே வழி இந்த அவஸ்த்தையை காங்கிரஸ் பெற ஆட்சி பொறுப்பில் இருந்து விலகுவதுதான்
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
26-மே-201915:15:20 IST Report Abuse
sundarsvpr காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்துவது முள்ளின்மேல் நடப்பது போன்றது. தேவகவுடா காங்கிரஸ் அனுதாபி. பி ஜ
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-மே-201920:46:42 IST Report Abuse
அசோக்ராஜ் அங்கேயும் தொங்குறான் .... இங்கேயும் தொங்குறான் .... தொங்குராசா எங்கேயும் தொங்குறான் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X