பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் லேசான மழை ; வானிலை மையம்

Added : மே 25, 2019
Advertisement
வானிலை, தமிழகம், லேசானா மழை, வெப்பச்சலனம்

சென்னை : தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது: ''ஆந்திர மாநில, ராயலசீமா முதல் குமரிக் கடல் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையாலும் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்யக் கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சித்தார், பெருஞ்சாணி ஆகிய இடங்களில் 6 சென்டிமீட்டரும்,பேச்சிப்பாறை, பேரையூர் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. உள் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும்,'' என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X