கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்று வரும் படகு போட்டியில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இன்று, (மே 25) கொடைக்கானல், ஏரி சங்கம் சார்பில் நடைபெறும் துடுப்பு மற்றும் தட்டை படகு போட்டிகள் தொடங்கியது. இந்த படகுப் போட்டிகள், மொத்தம் 14 சுற்றுகளாக நடைபெறுகிறது.
மாணவ,மாணவிகள், ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் என பிரிக்கப்பட்டு நடைபெறும் இந்த படகு போட்டியில், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர் பங்கேற்றனர்.