பாலித்தீவில் எரிமலை வெடிப்பு| Dinamalar

பாலித்தீவில் எரிமலை வெடிப்பு

Added : மே 25, 2019
பாலித்தீவு, எரிமலை வெடிப்பு, அகங், விமானங்கள் ரத்து

பாலி : இந்தோனேஷிய நாட்டின், பாலித் தீவில் அகங் என்னும் எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த அகங் எரிமலை குமுறத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று அகங் எரிமலை வெடித்து எரிமலைக் குழம்புகளை கக்கக் தொடங்கியது. ஏற்கனவே, இந்த எரிமலை கடந்த 1963-ஆம் ஆண்டு வெடித்துள்ளது. அதன் பின்னர் தற்போது மீண்டும் வெடித்துள்ளதாக, இந்தோனேசியா நாட்டின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அகங் எரிமலையின் தீக்குழம்பும், பாறைகளும் 3 கிலோமீட்டர் சுற்று வட்டாரங்களில் பரவி விழுந்தன. சுற்று வட்டாரங்களில் உள்ள 9 கிராமங்களில் காற்றில் அடர்த்தியான சாம்பல் துகள்கள் பரவியதால் இருள் சூழ்ந்தது. இதனால் பாலி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X