கட்சி மறுகட்டமைப்பு: காங்., அறிவிப்பு| Dinamalar

கட்சி மறுகட்டமைப்பு: காங்., அறிவிப்பு

Added : மே 25, 2019 | கருத்துகள் (50)
காங்., ராகுல், ராஜினாமா, நிராகரிப்பு, மறுகட்டமைப்பு, முழு அதிகாரம், தீர்மானம்

புதுடில்லி ; நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியை முழுவதுமாக மறுகட்டமைப்பு செய்யப்போவதாக, அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.


12.13 கோடி ஓட்டு :


கூட்டத்திற்கு பின்னர், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, காங்., கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மூத்ததலைவர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறுகையில், '' லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு, நாட்டில் உள்ள 90 கோடிப்பேரில், 12.13 கோடி மக்கள் ஓட்டளித்துள்ளனர்.


ராஜினாமா நிராகரிப்பு :


பொதுத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். இனி காங்கிரஸ் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாங்கள் நாட்டின் மக்களுக்கு உதவி செய்யவே அர்ப்பணித்துக்கொண்டுள்ளோம். தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித்தலைவர் ராகுல் ராஜினாமா செய்ய முன்வந்தார். அதனை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏகமனதாக நிராகரித்துவிட்டது.


மறுகட்டமைப்பு


அவரது தலைமை கட்சிக்கு தேவைப்படுகிறது. கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கான முழுமையான அதிகாரத்தை ராகுலுக்கு வழங்கி காரியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X