நெல்லை; 8 அணைகள் வறண்டன| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை; 8 அணைகள் வறண்டன

Added : மே 25, 2019
அணைகள், மணிமுத்தாறு, பாபநாசம், வறண்டன

பாபநாசம் : நெல்லை மாவட்டத்தில் அடவி நயினார் உள்ளிட்ட 8 அணைகள், மழையில்லாத காரணத்தால் வறண்டு போயுள்ளன. இது, விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.

நெல்லையில், மணிமுத்தாறு, பாபநாசம், கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன.

இதில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. கருப்பா நதி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.

குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளும் நீரோட்டம் இல்லாமல் வறண்டு விட்டன. தென்மேற்கு பருவ மழை பெய்தால் தான், இனிமேல் வறண்டு உள்ள 8 அணைகளுக்கும் தண்ணீர் வரும்.
இல்லாவிடில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலையில் உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X