பதவி விலக மம்தா விருப்பம்

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (61)
Advertisement
மம்தா பானர்ஜி, முதல்வர், மேற்குவங்கம், பா.ஜ.,

கோல்கத்தா : மேற்குவங்கத்தின் முதல்வர் பதவியில் இனியும் தொடர விரும்பவில்லை என திரிணமுல் காங்., கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. ஆளும் மம்தாவின் திரிணமுல் காங்., கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.,வின் இந்த வெற்றி மம்தாவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா கூறுகையில், மத்திய படைகள் எங்களுக்கு எதிராக செயலாற்றின. அதனால் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டது. இந்து - முஸ்லிம் பிரிவினை ஏற்பட்டது. அதனால் ஓட்டுக்களும் பிரிந்தன. நாங்கள் தேர்தல் கமிஷனிடம் இது குறித்து புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பா.ஜ.,வின் இந்த வெற்றியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பா.ஜ., எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. இதை கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு பயமில்லை. 6 மாதங்களாக என்னால் பணியாற்ற முடியவில்லை என கட்சியினரிடம் கூறினேன்.
அதிகாரமற்ற முதல்வராக உள்ளேன். கூட்டம் துவங்கியது முதலே, நான் முதல்வராக இனியும் தொடர விரும்பவில்லை என்று தான் கூறினேன். இந்த நாற்காலி எனக்கானது அல்ல. கட்சி சின்னம் எனக்கு மிகவும் முக்கியம். மக்கள் துணிவான முடிவு எடுத்தால் என்னால் முதல்வராக தொடர முடியும். எங்களின் ஓட்டு வங்கியை அதிகரிக்க நினைக்கிறோம். இடதுசாரிகள் ஓட்டு தான் பா.ஜ.,வுக்கு சென்றுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
26-மே-201911:29:25 IST Report Abuse
sundarsvpr பங்களாதேஷ் இருந்து ஊடுருவல் தடுக்கப்படும் என்ற உத்திரவாதம் மம்தாவால் கூறஇயலாது. மம்தா முதல்வர் பதவியை தக்க வைப்பது கடினம்
Rate this:
Share this comment
Cancel
26-மே-201909:07:43 IST Report Abuse
S Ramamurthi The converts (muslims
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
26-மே-201906:44:34 IST Report Abuse
Subramanian Arunachalam இவர் பதவி விலக யார் தடையாக இருக்கிறார் . இவர் யாருடைய அனுமதிக்கு காத்து இருக்கிறார் . மிக வேடிக்கை . கட்டுமரம் உயிரோடு இருந்தபோது ஜெயலலிதாவிடம் தேர்தலில் மரண அடி வாங்கிய பிறகு ஒரு நாடகம் நடத்துவார் . அது போல் இருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X