அரசியல் செய்தி

தமிழ்நாடு

தபால் ஓட்டுகளில் தி.மு.க., கூட்டணி அமோகம்: அரசு ஊழியர்கள் 67 சதவீதம் பேர் ஆதரவு இ.பி.எஸ்., அரசு மீதான கோபம் எதிரொலிப்பு

Updated : மே 26, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 தபால் ஓட்டுகளில் தி.மு.க., கூட்டணி அமோகம்:  அரசு ஊழியர்கள் 67 சதவீதம் பேர் ஆதரவு இ.பி.எஸ்., அரசு மீதான கோபம் எதிரொலிப்பு

அ.தி.மு.க., அரசு மீதுள்ள கோபத்தில், தபால் ஓட்டு செலுத்திய, அரசு ஊழியர்களில், 67 சதவீதம் பேர், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்; 20 சதவீதம் பேர் மட்டுமே, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர்.
தேர்தலுக்கு முன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டனர்.அவர்களின் கோரிக்கையை, அரசு ஏற்கவில்லை. ஆனால், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.அ.தி.மு.க., அரசு, போராட்டத்தில் ஈடுபட்டோரை அழைத்து பேசாமல், போராட்டத்தை ஒடுக்க, நடவடிக்கை எடுத்தது. வேறு வழியின்றி, அரசு ஊழியர்களும், போராட்டத்தை கைவிட்டனர்.எனினும், அவர்களுக்கு அரசு மீதான கோபம் தீராமல் இருந்தது.

தங்கள் கோபத்தை, தேர்தலில் காண்பித்துள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு கள் வழங்கப்பட்டன. கடந்த தேர்தல்களை விட,இம்முறை அதிக அளவில், தபால் ஓட்டுகள் பதிவாகின.லோக்சபா தேர்தலில், 2.06 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இதில், தி.மு.க., கூட்டணி, 1.37 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளது. பதிவான தபால் ஓட்டுகளில், இது, 67 சதவீதம். அ.தி.மு.க., கூட்டணிக்கு, 41 ஆயிரத்து, 230 தபால் ஓட்டுகள் மட்டும் கிடைத்துள்ளன; இது, 20 சதவீதம்.மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு, 13 சதவீத தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன.

கன்னியாகுமரி தொகுதியில் மட்டும், தபால் ஓட்டு பதிவில் தலைகீழ் மாற்றம் நடந்திருக்கிறது. அங்கு, தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, கூடுதல் தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன.இந்த தொகுதியில், காங்கிரசுக்கு, 2,608 ஓட்டுகளும், பா.ஜ.,விற்கு, 2,704 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. பெரம்பலுார் தொகுதியில், பதிவான தபால் ஓட்டுகளில், 83.5 சதவீதம், தி.மு.க., வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும், 'நோட்டா'விற்கும் பலர் தபால் ஓட்டளித்துள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
parthasarathy - chennai,இந்தியா
26-மே-201920:07:50 IST Report Abuse
parthasarathy அரசு ஊழியர்கள் ஓட்டுரிமை மறுக்கப்படுவது நல்லது. தமழகத்தில் நிரந்தரமாக திமுக அரசு ஊழியர்களை கெடுத்து வைத்துள்ளது. செல்லப்பிள்ளைகளாக வைத்துள்ளது. ஏகப்பட்ட அளவற்ற சம்பளம் எப்பாடுபட்டாவது திமுக அரசு ஊழியர்களுக்கு கொடுத்து கைப்பாவைகளாக வைத்துள்ளது என்பது உண்மை. இதுவே எனக்கு தெரிந்த உண்மை ஆகும்
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
26-மே-201915:46:22 IST Report Abuse
sundarsvpr அரசு ஊழியர்கள் அரசிற்கு எதிர்த்து வாக்கு அளித்தாலும் அரசுகள் அவர்கள்மீது வன்மம் காட்டுவதில்லை. பெருபான்மையான அரசு ஊழியர்கள் பணியில் நன்னடத்தை விதியை மீறுவதில்லை.
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
26-மே-201919:59:57 IST Report Abuse
meenakshisundaramஅரசு ஊழியர்கள் பெரும்பாலும் நேர்மையானவர்கள் என்றாலும் அவர்களில் ஒரு வகையினர் 'துட்டு 'ஒன்றையே தங்கள் வாழ்வின் குறிக்கோளாக (தவறான முறையில் ,குறுகிய காலத்தில் சேர்ப்பதையே )கொண்ண்டுள்ளதையும் அதீத பொருளீட்ட மனிதாபிமானம் இன்றியும் நடப்பதை கண்கூடாக பார்க்கிறோம்.இப்போதுள்ள EPS அரசு jacktee கோரிக்கைகளை பொருளாதாரா ரீதியில் மறுத்தது உண்மையே என்றாலும் இதை காரணம் காட்டி அவர்கள் அரசை எதிர்த்து வாக்களித்திருந்தால் அது மாபெரும் தவறே என்பதை ஒரு ஆசிரியர் என்ற முறையில் அதை கண்டிக்கிறேன்.அனால் அது உண்மையா என்று தெரியவில்லை.மேலும் அரசு ஊழியர்களில் உள்ளதே போல லஞ்சம் போன்ற தீமைகளை ஆசிரியர்கள் செய்ய வழி இல்லை ....
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
26-மே-201910:33:34 IST Report Abuse
Jaya Ram இவர்கள் காட்டியும் கொடுப்பார்கள் அதாவது பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் எதிலெல்லாம் சம்பாதிக்கலாம் என செய்வார்கள் அதன் மூலம் இவர்கள் லாபம் சம்பாதிப்பார்கள் ஆனால் இவர்கள் கேட்டதை கொடுக்கவேண்டும் இல்லை என்றல் எலெக்ஷன் சமயத்தில் இப்படி கொடுப்பார்கள் எனவே நேர்மையான எவனும் அரசு அதிகாரியாக பணிபுரிகிறேன் என்றால் அது ஒரு சதவீதம் மட்டுமே இருப்பர் மீதி எல்லாம் காட்டியும் கொடுப்பவர்கள் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X